Home
News

ஒப்போ நிறுவனம் சத்தமின்றி செய்த வேலை.! துணை பிராண்டாகும் ஒன்பிளஸ்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஒப்போ நிறுவனமும் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு ஒப்போ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒன்பிளஸ் மாறும் என்ற கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் இணைப்பு எப்படி இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்
தகவல்களின் படி, ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என்ற கூறப்பட்டுள்ளது.

மேலும் இது சார்ந்த விவரங்களை ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் செய்தி பிரிவு அறிக்கையின் புகைப்படங்கள் இணைப்பட்டுள்ளன. அதில் இரு நிறுவனங்கள் இணைப்புக்கு பின்பு ஒப்போ நிறுவனத்தின் அங்கமாக ஒன்பிளஸ் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரண்டு நிறுவனங்கள் இணைந்த

அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்த பின்பு, அதிக ஊழியர்கள் எண்ணிக்கையுடன் மேலும் சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் Blue Void (matte), Charcoal Ink (glossy), Silver Ray நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus is becoming an OPPO subbrand brand: Leaked Document: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X