ஹாசல்ப்ளாட் கேமரா, அலர்ட் ஸ்லைடர் என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!

|

வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று முன்னணி தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ், இந்தியாவின் தலைநகர் ஆன புது டெல்லியில் நடைபெறும் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம், ஏனெனில் இது, கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் நிறுவனத்தின் முதல் ஆஃப்லைன் நிகழ்வு ஆகும். "க்ளவுட் 11" என்கிற தீமின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்வானது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிராண்டின் முதன்மை தயாரிப்புகளின் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை காட்சிப்படுத்தும், அதோடு பயனர் அனுபவத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஒரு விதிவிலக்கான பயனர் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி, ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சமீபத்திய வெளியீட்டின் மூலம், தனது வாடிக்கையாளர்களை "கிளவுட் 9" இலிருந்து "கிளவுட் 11" க்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் உடன் எதிர்காலத்தை அனுபவிக்கவும்: கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிப்ரவரி 7, 2023 அன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதன் சமீபத்திய முதன்மை தயாரிப்புகளை வெளியிடும்: அது ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகும்.

ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் 11 5ஜி 5G ஆனது, இந்த பிராண்டின் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக மக்கள் அதிகம் விரும்பும் அலெர்ட் ஸ்லைடரையும் ஒன்பிளஸ் திரும்ப கொண்டு வந்துள்ளது. அறியாதோர்களுக்கு, ஒன்பிளஸ் அலெர்ட் ஸ்லைடர் ஆனது சில ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அமைந்துள்ள ஒரு ஐகானிக் பிஸிக்கல் ஸ்விட்ச் ஆகும், இது வெவ்வேறு நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ்களுக்கு இடையில் விரைவாக மாறுவதற்கு உதவுகிறது. இது பொதுவாக மூன்று நிலைகளை கொண்டுள்ளது: "சைலன்ட்," "ப்ரியாரிட்டி"" மற்றும் "ஆல்." நீங்கள் "சைலண்ட்" என்பதை தேர்வு செய்யும் போது, டிவைஸில் இருந்து எந்தவொரு ஒலியும் எழாது; அதாவது உள்வரும் நோட்டிஃபிகேஷன்களுக்கு வைப்ரேட் ஆகும். ஒருவேளை நீங்கள் "ப்ரியாரிட்டி" மோடில் இருந்தால் குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது ஆப்களில் இருந்து மட்டும் நோட்டிஃபிகேஷன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் "ஆல்" என்று தேர்வு செய்தால் எல்லா அறிவிப்புகளும் சாதாரணமாக அணுக கிடைக்கும். இதனால் தான் அலெர்ட் ஸ்லைடர் ஒரு வசதியான அம்சமாக பார்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கு, அவர்களின் ஸ்மார்ட்போன்களின் நோட்டிஃபிகேஷன் நடத்தை மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது ஒன்பிளஸ் பயனர்களிடையே பிரபலமான அம்சமாக இருந்து வருகிறது, மேலும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிலும் இடம்பெற உள்ளது. இது தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அலெர்ட் ஸ்லைடரை தவிர, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பானது, மேம்படுத்தப்பட்ட புகைப்பட வெளியீட்டிற்காக மிகவும் பிரபலமான ஹாசல்ப்ளாட் ட்யூனிங்கை பெற்றுள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பிற்காக ஒன்பிளஸ் நிறுவனம், பிரபல ஸ்வீடிஷ் கேமரா மற்றும் இமேஜ் டெக்னாலஜி நிறுவனமான ஹாசல்ப்ளாட் உடன் இணைந்து செயல்பட்டுள்ளது. ஏற்கனவே ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்பை கொண்டுள்ள ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இதுவொரு கூடுதல் தரநிலை ஆகும். ஹாசல்ப்ளாட் பிராண்டிங் அதன் உயர்நிலை தொழில்முறை கேமராக்களுக்காக அறியப்படுகிறது மற்றும் உயர்தர படங்களை தயாரிப்பதில் நற்பெயரையும் கொண்டுள்ளது. ஹாசல்ப்ளாட் உடன் கூட்டுசேர்வதன் மூலம், ஒன்பிளஸ் நிறுவனமானது ஹாசல்ப்ளாட்டின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை அதன் ஸ்மார்ட்போன்களில் சேர்க்க முடியும், இதன் விளைவாக அதன் பயனர்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான புகைப்படங்களை பதிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராவில் உள்ள ஹாசல்ப்ளாட் ட்யூனிங் ஆனது புகைப்பட ஆர்வலர்களை குறிவைக்கும் ஒரு முக்கிய விற்பனை புள்ளியாகவும் இருக்கும்.

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை முழுமையாக்குவது புத்தம் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகும், இது ஸ்டீரியோ குவாலிட்டி ஆடியோ அனுபவத்தை மிகவும் தெளிவாக வழங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஆடியோ தயாரிப்பு ஆகும். இந்த இயர்பட்ஸ் ஒரு நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவமைப்பை கொண்டுள்ளன, ஆகையால் இவைகளை நீண்ட நேரத்திற்கு மிகவும் வசதியாக அணிந்துகொள்ள முடியும். மேலும் இவைகள் நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் திறனையும் கொண்டுள்ளன. ஆகையால் உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆனது வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும். இந்த அதரவு பயணத்தின்போது எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை!

ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகிய இரண்டுமே எல்லைகளை தாண்டி, சிறந்து விளங்குவதற்கான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றன.

https://www.instagram.com/reel/CmWyhemDeQd/?utm_source=ig_web_copy_link

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன சிறப்புகள் உள்ளன?

இந்த நிகழ்வின் முக்கிய வெளியீடாக இருப்பது - ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது மற்ற போட்டியாளர்களை ஒன்றுமில்லாது செய்வதற்கும், சிறந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கான மகுடத்தை சூடும் நோக்கத்தின் கீழும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "நெவர் செட்டில்" தத்துவத்தின் கீழும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தான் களமிறங்கும் பிரிவில் ஒப்பிடமுடியாத தரம் மற்றும் செயல்திறனை கொண்டுவரும் ஒரு ஸ்மார்ட்போனும் கூட. ஒன்பிளஸ் ஆனது - வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட ஒரு பிராண்டாகும், எனவே தான் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் பயனர் கருத்துக்களையும், அதன் அனைத்து அனுபவத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வானது ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த பிராண்டின் புதிய மற்றும் முதன்மையான தயாரிப்புகளான ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் பட்ஸ் ப்ரோ 2 ஆகியவைகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனுடன் மேம்பட்ட பயனர் அனுபவத்தையும் கொண்டு வருகின்றன. பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் மற்றும் ஹாசல்ப்ளாட்டால் ட்யூன் செய்யப்பட்ட கேமராவின் வருகையுடன், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சந்தையில் ஒரு சிறந்த போட்டியாளராக இருக்கும் என்பது உறுதி. அதே போல ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆனது அதன் சிறந்த ஆடியோ தரம் மற்றும் வசதியான வடிவமைப்பின் மூலம், பயனர்கள் மத்தியில் வெற்றி பெறுவதும் உறுதி. ஒன்பிளஸ் நிறுவனத்திலிருந்து வரும் இந்த 2 சமீபத்திய மற்றும் சிறந்த டிவைஸ்களின் வழியாக தங்கள் டிவைஸ்களை மேம்படுத்த விரும்புவோர்கள் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வை தவற விடவேக்கூடாது.

Best Mobiles in India

English summary
OnePlus is back with community favorite features Hasselblad and Alert Slider

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X