இந்தியாவில் இழுத்து மூடப்படும் OnePlus கம்பெனி? கடுப்பான சிஇஓ!
இந்தியாவில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இழுத்து மூடப்பட உள்ளதாக அல்லது கலைக்கப்பட உள்ளதாக வெளியான செய்திகளை, ஒன்பிளஸ் நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது. ஒன்பிளஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ராபின் லியு, கடந்த ஜனவரி 21 அன்று வெளியான வதந்திகளை மறுத்து, இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளும் வணிக நடவடிக்கைகளும் வழக்கம் போல் இயங்குகின்றன என்று கூறி உள்ளார்
பரவி வரும் கூற்றுகள் தவறானவை; அவைகள் உண்மை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எள்ளலும் மக்கள் எப்போதுமே அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ராபின் லியு வலியுறுத்தி உள்ளார்.

வதந்திகள் எங்கிருந்து வந்தன? ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் ஆனது, தாய் நிறுவனமான ஒப்போவின் (OPPO) கீழ் இருந்து ஒன்பிளஸ் நிறுவனம் படிப்படியாக அகற்றப்படுவதாக கூறியதை தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது. வெளியான தகவல் - உள் மறுசீரமைப்பு, குறைக்கப்பட்ட குழுக்கள், ரத்து செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட முடிவெடுப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இருந்தது. இது இந்தியா உட்பட பல சந்தைகளில் ஒன்பிளஸின் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்தது.
மூலோபாய மாற்றங்கள் தான் நடக்க உள்ளதாம்: ஒன்பிளஸ் நிறுவனம் சந்தை அழுத்தங்களுக்கு பதிலளிக்க அதன் தயாரிப்பு மற்றும் வணிக உத்தியை சரிசெய்து வருகிறது. வரவிருக்கும் டிவைஸ்கள் எல்லா இடங்களிலும் முதன்மையானவையாக இருப்பதை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலோபாயமானவை என்றும், இந்தியாவிலிருந்து வெளியேற எந்த திட்டத்தையும் குறிக்கவில்லை என்றும் நிறுவனம் கூறுகிறது.
வதந்திகள் ஏன் இவ்வளவு வேகமாக பரவுகின்றன? தொழில்நுட்ப துறையில் வதந்திகள் எவ்வளவு விரைவாக சுழலக்கூடும் என்பதை இந்த நிலைமை காட்டுகிறது. அமைதியான வெளியீடுகள் மற்றும் மறுசீரமைப்பு பெரும்பாலும் சரிவு என்று தவறாக கருதப்பட்டு, தேவையற்ற பீதியை உருவாக்குகின்றன. ஊகங்கள் இருந்தபோதிலும், ஒன்பிளஸ் இந்தியா தொடர்ந்து சாதாரணமாக செயல்பட்டு இந்திய சந்தைக்கு உறுதியுடன் உள்ளது.
அடுத்தது ஒன்பிளஸ் நோர்ட் 6 அறிமுகம் தான்: ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய மாடல்களை தொடர்ந்து இந்நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலையும், பின்னர் அதன் அடுத்த மினி ஸ்மார்ட்போன் / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15எஸ் மாடலையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
9000mAh பேட்டரி உடன் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் டர்போ 6 மாடல் தான் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஆக அறிமுகம் செய்யப்படும் என்று, அதாவது ரீபிராண்டட் வெர்ஷன் ஆக அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது எப்படியும் இன்னும் சில வாரங்களுக்குள் (அதிகபட்சம் இந்த 2026 காலாண்டிற்குள்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது முன்னதாக வெளியான "டி" பிராண்டிங் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இதுவும் ஒரு மினி / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








