சியோமி, சோனி, எல்ஜி ஓரம்போ: வருகிறது மிரட்டலான ஒன்பிளஸ் டிவி.!

குறிப்பாக இந்த காபி அனுபவத்தை இந்தியா பிரான்ஸ், ஜெர்மனி,கிரீஸ், ஹாங்காங், ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் இது செயல்படுத்தியது அந்நிறுவனம்.

|

இந்திய சந்தையில் சாம்சங், சியோமி, சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் அதிகளவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது இந்நிலையில் விரைவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இதனுடன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனர் Pete Lau மற்றும் Carl Pei தெரிவித்தது என்னவென்றால் வரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என்று தெரிவித்தார்.

சியோமி, சோனி, எல்ஜி ஓரம்போ: வருகிறது மிரட்டலான ஒன்பிளஸ் டிவி.!

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் டிவியில் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் மற்றும் சாம்சங் விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அதே தரம் மற்றும் சிறந்த வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியிலும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார் டிவியின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது என இந்த ஒன்பிளஸ் டிவி மாடல்.

48சதவீதம் பங்குகளை கைப்பற்றியுள்ளது

48சதவீதம் பங்குகளை கைப்பற்றியுள்ளது

ஒன்பிளஸ் அதன் பிரீமியம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நீங்கள் ஒன்பிளஸ் பிரத்யேக சேவை மையத்தில் இருக்கும்போது, ​​இசைக்குச் செவிசாயுங்கள், உயர் வேக இணையத்தை அணுகலாம் அல்லது ஒரு உயர்-நிலை PS4 ஐக் கொண்ட சிறப்பு 'பொழுதுபோக்கு அறைகளில்' ஒரு விளையாட்டை விளையாடலாம், அதிக பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் உங்கள் சாதனங்களை கவனித்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் வாடிக்கையாளர்களுக்கு காபி அனுபவத்தை ஒன்பிளஸ் சர்வீஸ் மையங்களில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த காபி அனுபவத்தை இந்தியா பிரான்ஸ், ஜெர்மனி,கிரீஸ், ஹாங்காங், ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் இது செயல்படுத்தியது அந்நிறுவனம். மேலும் அனைத்து ஒன்பிளஸ் நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் சர்வீஸ் செய்தால் கண்டிப்பாக காபி இலவசமாக வழங்கப்படும். மேலும் இதுபோன்ற பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் விற்பனையிலும் வெற்றிப் பெற்றுள்ளது இந்நிறுவனம். குறிப்பாக பட்ஜெட் விலையில் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி விரைவில் ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 48சதவீதம் பங்குகளை கைப்பற்றியுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களை விட தனித்திறமையைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள். அந்தவரிசையில் இப்போது அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் கூட பல்வேறு தனி திறமையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி செயல்திறன் மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாடு மூலம் மனித அனுபவத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில் புதிய ஒன்பிளஸ் டிவி மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தொழில்நுட்ப நுகர்வோர் பயனாளர்களுக்கான ஸ்மார்ட் டி.வி.யைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது, அந்த வரிசையில் நவீன ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் அதிக முயற்சியை எடுக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

குறிப்பாக இணையம், ஆப், வீடியோ கேம் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும் என அந்நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார். மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் கேமராவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்

 வாடிக்கையாளரின் பிராண்ட்:

வாடிக்கையாளரின் பிராண்ட்:

ஒன்பிளஸ் பொறுத்தவரை வாடிக்கையாளரின் பிராண்ட் ஆகும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது அந்நிறுவனம். அதன்படி விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும். இந்நிறுவனம் எப்போதும் பயனர் மைய அம்சங்களையும், வடிவமைப்பு தத்துவத்தையும் மதிப்பீடு செய்து சாதங்களை உருவாக்குகிறது. விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் டிவி வெற்றியைப்
பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு
அடுத்த மாதம் துவகத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, ஹெட்ஃபோன்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யும் எனத் தெரிவித்துள்ளது. சிறப்பு சலுகைகள் மற்றும் பரிசு போன்றவை ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆன்லைன் தளங்களில் மட்டுமே இந்த ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று
ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் தான் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்படும்.

முடிவுறை:

முடிவுறை:

சமீபத்தில் வெளிவந்த சாம்சங், எல்ஜி, சியோமி போன்ற ஸ்மார்ட் டிவி மாடல்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றன, அதே அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியிலும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ட்ரீமிங் போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும்.

சோனி மற்றும் சாம்சங் போன்ற டிவி நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் ஒன்பிளஸ் நிறுவனம், மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் கூட ஐபோன் சாதனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு வருட காலப்பகுதியில், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர் தொழில்முறை ஊழியர்களால் சிறந்த சேவையை வழங்கி வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். அனைத்து இடங்களிலும் பிரத்யேக சேவை மையங்களை நிறுவியுள்ளது இந்நிறுவனம். அதன்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பிரீமியம் சேவை அனுபவத்தை வழங்குவதற்காக பல்வேறு புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Best Mobiles in India

English summary
OnePlus has a new flagship killer for the TV industry: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X