காசுலாம் திருப்பி தர முடியாது! 4 OnePlus போன்களில் Green Line சிக்கல்! இலவசமா Screen மாத்தி தருவதாக அறிவிப்பு!
சில மாதங்களுக்கு முன்பாக.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2024 பிப்ரவரி மாதத்தில் "இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய கஸ்டமர்களுக்கு காசு திருப்பி கொடுத்துடுறோம்" என்று சரண்டர் ஆகும் அளவிற்கு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஒரு பிரச்னையில் சிக்கியது. இந்த பிரச்சனை ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனுடன் தொடர்புடையதாக மட்டும் இருந்தது. அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் (UFS 4.0 Storage) வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது. ஆனால் இது யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் விற்பனைக்கு வந்தது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் குறித்து சந்தேகம் எழுப்பிய பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ள 256ஜிபி ஸ்டோரேஜை வாங்கிய கஸ்டமர்களுக்கு ரீஃபண்ட் கொடுக்கப்பட்டது.

தற்போது இதே போல இன்னொரு பிரச்சனையில் ஒன்பிளஸ் நிறுவனம் சிக்கிக்கொண்டு உள்ளது. அது என்ன பிரச்சனை? இந்த பிரச்சனையில் என்னென்ன ஒன்பிளஸ் மாடல்கள் சிக்கி உள்ளன? இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ள தீர்வு என்ன? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நிறுவனமானது, "கிரீன் லைன்" டிஸ்பிளே சிக்கலை எதிர்கொள்ளும் குறிப்பிட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இலவசமாக ஸ்க்ரீனை மாற்றி தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro), ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T), ஒன்பிளஸ் 9 (OnePlus 9) மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் (OnePlus 9R) ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீன்கள் எந்த கட்டணமும் இல்லாமல் ரீப்ளேஸ் செய்து தரப்பட உள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் "கிரீன் லைன்" பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத்து. ஏனென்றால், பெரும்பாலும் இது மென்பொருள் குறைபாடு என தவறாக கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் இது வன்பொருள் பிரச்சனையாகும்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த இலவச திட்டத்தின் மூலம் வாடிக்கையாளரின் கவலைகளை நிவர்த்தி செய்வதையும், ஸ்மார்ட்போன்களின் ஆயுளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை எதிர்ப்பை மேம்படுத்த புதிய டிஸ்பிளே தொழில்நுட்பத்தையும் ஒன்பிளஸ் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
தற்போதைக்கு இந்த இலவச திட்டம் இந்தியாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம். இந்த இலவச ஸ்க்ரீன் மாற்று திட்டம் குறிப்பாக "கிரீன் லைன்" சிக்கலுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். ஒருவேளை உங்கள் டிஸ்பிளேவில் ஏதேனும் பிஸிக்கல் டேமேஜ் இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு அணுக கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, கடந்த ஜூலை 16 நடந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டில் (OnePlus Summer Launch Event) ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மாடலை அறிமுகம் செய்திருந்தது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications