Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை! போட்டி இதுதான் நீங்க ரெடியா?

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிராக்கபிள்ஸ் (Crackables) உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? 2018 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிட்ட நேரத்தில் வைரலாகிய ஒன்பிளஸின் "கிரிப்டோ-பஸ்ஸில்" கேம்மை நிறுவனம் மீண்டும் களமிறக்கப் போகிறது. இந்த புதிர் விளையாட்டு போட்டிக்கான கிராக்கபிள்ஸ் இரண்டாவது சுற்றுக்கு மீண்டும் திரும்பியுள்ளது, இந்த முறை இதன் பரிசு பவுண்டி 20,000 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராக்கபிள்ஸ் வெர்ஷன் 2.0

கிராக்கபிள்ஸ் வெர்ஷன் 2.0

ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுகத்துடன் வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் இந்த கிராக்கபிள்ஸ் வெர்ஷன் 2.0 இலவசமாக்க அணுகக்கிடைக்கும். இந்த கேமில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்கான முன்பதிவுகள் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கியுள்ளது. இந்த புதிய கிராக்கபிள்ஸ் 2.0 விளையாட்டின் விதிகள் என்ன என்பதை பார்த்துவிடலாம்.

மிகவும் சிக்கலான புதிர்கள்

மிகவும் சிக்கலான புதிர்கள்

இந்த கிரிப்டோ-பஸ்ஸில் கேம் முந்தைய பதிப்பைப் போலவே, கிராக்கபிள்ஸ் 2.0 பங்கேற்பாளர்களுக்குத் தொடர்ச்சியான டிஜிட்டல், கதை சார்ந்த புதிர்களைக் கொடுக்கிறது. முதலில் பங்கேற்பாளர்களுக்குக் குறைந்த சிரமத்துடன் புதிர்கள் வழங்கப்படும், பிறகு வீரர்கள் கேமில் முன்னேறும்போது மிகவும் சிக்கலான புதிர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

10,000 டாலர் வெல்லும் வாய்ப்பு

10,000 டாலர் வெல்லும் வாய்ப்பு

பங்கேற்பாளர்கள் அடுத்த கட்டத்தை அடைய "கேட்ஸ்" வழியாகப் பயணிப்பார்கள், மேலும் சில புதிர்களுக்கும் வீரர்கள் ஒன்றாகச் சேர்த்துச் சமாளிக்க வேண்டியதிருக்கும். கடைசி புதிருக்குத் தீர்வு காணும் முதல் பத்து வீரர்களுக்கு சுமார் 10,000 டாலர் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 டாலர்

COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 டாலர்

COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்க வீரர்கள் கூடுதலாக 10,000 டாலர் வெல்லலாம் என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. இந்த கிராக்கபிள்ஸ் விளையாட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடையும் மற்றும் இறுதிப் போட்டி மே 7 அன்று உலகளவில் ஒளிபரப்பப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!

புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியுமா?

புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியுமா?

கிராக்கபிள்ஸின் 2.0 வெர்ஷனை உருவாக்க ஒன்பிளஸ் மீண்டும் கூகிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கேமை UNIT9 இன் விளையாட்டு இயக்குனர் ஜாகுப் ஜாகுபோவ்ஸ்கி வழிநடத்தி உருவாக்கியிருக்கிறார். உங்களால் இந்த புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியுமா?

Best Mobiles in India

English summary
OnePlus game Crackables is back for round 2 with a $20,000 prize : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X