OnePlus எடுக்கும் புது அவதாரம்: புகைப்படத்தை பகிர்ந்து குஷியை கிளப்பிய CEO!
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமாக ஆண்டாக 2022 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ, ஒப்போ, சியோமி, மோட்டோரோலா மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகள் முன்னதாகவே உலகம் முழுவதும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த நிறுவனங்களின் பட்டியலில் மற்றொரு முன்னணி பிராண்ட் இணைய தயாராகி விட்டது.

வளர்ந்து வரும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் ஃபோல்ட் மேலோட்ட படத்தை ஒன்பிளஸ் இணை நிறுவனர் Pete Lau ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதில் இரண்டு சிப் ட்ரே-க்கள் இரண்டாக மடிக்கும்படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
தொடர்ந்து அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC சிப் ஆதரவு
ஒன்பிளஸ் இன் தாய் நிறுவனமான ஒப்போ முன்னதாகவே ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இது ஒப்போ ஃபைண்ட் ஸ்மார்ட்போன் ஆகும். ஒப்போ ஃபைண்ட் உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் ஃபோல்ட் தோற்றம் அடிப்படையில் குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC சிப் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
பெரும்பாலான ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்களை போன்றே ஒன்பிளஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போனும் 1080p கவர் டிஸ்ப்ளே, QHD+ தெளிவுத்திறன், 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுகளை கொண்டிருக்கும் எனவும் இது உள்-மடிப்பு டிஸ்ப்ளே ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஸ்மார்ட்போன் வேகமான வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை வழங்கும் என கணிக்கப்படுகிறது.

விலை என்னவாக இருக்கும்?
OnePlus ஃபோல்டிங் ஸ்மார்ட்போன் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை விட விலை குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் தற்போது வரை சந்தையில் கிடைக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் மிகவும் விலை உயர்ந்தது Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் தான்.

OnePlus ஃபோல்ட் வெளியீட்டு தேதி?
OnePlus Fold ஸ்மார்ட்போன் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிலும் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 OS அடிப்படையிலான OxygenOS 13 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
OnePlus Fold ஸ்மார்ட்போன் சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்கள்
ஒரே மாதரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என்று வருத்தப்படும் ப்ரீமியம் வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்ய ஃபோல்டபிள், ஃப்ளிப் போன்ற ஸ்மார்ட்போன்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ஒரே காலக்கட்டத்தில் இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

சாம்சங் மற்றும் சாம்சங்
சாம்சங்கின் முந்தைய ஃபோல்ட் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் புதிய Galaxy Z Fold 4 மாடலை அறிமுகம் செய்தது.
அதேபோல் சியோமியின் முந்தைய போல்ட் மாடலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் புதிய Xiaomi Mix Fold 2 மாடலை மேம்பட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்தது.
இரண்டு ஸ்மார்ட்போன்களுமே லட்ச ரூபாய் விலைப் பிரிவில் தான் அறிமுகமாகி இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய விலை மதிப்பின்படி தோராயமாக ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,06,300, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,18,000, 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,41,600 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications