Home
News

2 டிஸ்பிளேவுடன் வருகிறது புது OnePlus போல்டபில் Mobile போன்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

OnePlus 11 வெளியீட்டு நிகழ்வின் போது, ​​OnePlus அதன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன்களின் வருகையை பற்றி உறுதிப்படுத்தி, ஒன்பிளஸ் ரசிகர்களை குஷியடைய செய்தது. இந்த நிகழ்வின் போது பிராண்ட் அதன் வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முதல் பார்வையை வழங்கியது.

இந்த OnePlus Foldable Smartphone சாதனம் Q3 2023 இல் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இப்போது, ​​நடந்து கொண்டிருக்கும் MWC 2023 இன் போது, ​​இரண்டாவது ஒன்பிளஸ் போல்டபில் (OnePlus Foldable Phone) ஸ்மார்ட்போனை OnePlus நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய OnePlus போல்டப்பில் மொபைல் போன் சாதனம் இந்த 2023 ஆண்டின் பாதியில் அறிமுகமாகுமாம்.

2 டிஸ்பிளேவுடன் வருகிறது புது OnePlus போல்டபில் Mobile போன்.!

ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமா? எப்போது?

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் OnePlus பிராண்டின் "ஃப்ரம் ஃபாஸ்ட் & ஸ்மூத் டு பியாண்ட் (From Fast & Smooth to Beyond)" குழு விவாதத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு மூலம், 2023 இன் இரண்டாம் பாதியில் நிறுவனம் ஒரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

OnePlus வெளியிட்டுள்ள அனைத்து சாத்தியக் கூறுகளையும் வைத்து பார்க்கையில், 2023 ஆம் ஆண்டின் Q3 இல் பிராண்ட் சாதனத்தை முற்றிலுமாக அறிமுகம் செய்து, விநியோகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus இன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலாக இந்த மடிக்கக்கூடிய சாதனம் இடம் பெரும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சாதனம் அதன் மடிப்பு வடிவம் காரணமாக, முக்கிய முதன்மை அம்சங்களை இழக்காது என்றும் OnePlus நிறுவனம் கூறியுள்ளது. OnePlus நிறுவனம் இந்த சாதனம் பற்றிக் கூறுகையில், "எங்கள் முதல் மடிக்கக்கூடிய மொபைல் சாதனமானது OnePlus கையொப்பத்துடன் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தைக் கொண்டிருக்கும். தொழில்துறை வடிவமைப்பு, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில், அதன் மடிப்பு வடிவத்தின் காரணமாக இது ஒரு முதன்மை ஃபோனாக இருக்கும்.

2 டிஸ்பிளேவுடன் வருகிறது புது OnePlus போல்டபில் Mobile போன்.!

OnePlus போல்டபில் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும்? இதை எப்போது எதிர்பார்க்கலாம்?

இன்றைய போல்டபில் ஸ்மார்ட்போன் (Foldable smartphone) சந்தையின் உச்ச அனுபவத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்த OnePlus விரும்புகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. MWC 2023 நிகழ்வில் கலந்துகொண்ட OnePlus இன் தலைவர் மற்றும் COO கிண்டர் லியு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைக்கு, சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்ற விபரங்கள் எதுவும் நமக்குத் தெரியவில்லை.

ஆனால், இந்த சாதனம் OnePlus V Fold என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது OPPO Find N2 உடன் சில ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, பிராண்டின் முதல் கிளாம்ஷெல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனைச் சுற்றியுள்ள வதந்திகளும் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன, எனவே வரும் மாதங்களில் OnePlus ஆல் ஒன்றுக்கு மேற்பட்ட போல்டபில் ஸ்மார்ட்போன்களை நாம் பார்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே, போல்டபில் ஸ்மார்ட்போன் பிரிவில் சாம்சங் (Samsung), சியோமி (Xiaomi), மோட்டோரோலா (Motorola), ஒப்போ (Oppo) போன்ற நிறுவனங்கள் சில மடக்கக்கூடிய சாதனங்களை வைத்துள்ளதினால், ஒன்பிளஸ் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய OnePlus போல்டபில் சாதனம் எப்படி இருக்குமென்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. OnePlus இன் இந்த புதிய சாதனத்தைப் பார்க்க உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று கருத்தைப் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Foldable Mobile Phone Launching Soon This Year 2023 Confirmed in MWC 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X