மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் டிராவல் பேக்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது.!
அதிகமான பயனம் செய்யும் பயனர்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்தினால் அருமையாக தான் இருக்கும்.
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து
இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை விட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் டிராவல் பேக்குகளை அறிமுகம் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, மேலும் இந்த டிராவல் பேக் விலைப் பொறுத்தவரை 4,990-ஆக உள்ளது. குறிப்பாக ஸ்லேட் பிளாக் மற்றும் பசுமை நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிராவல் பேக் மாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் தான் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அமேசான் வலைதளம் மற்றும் ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக்குகளை வாங்க முடியும்.

உயர்தரம் டிராவல் பேக்
ஒன்பிளஸ் நிறுவனம் பொதுவாக ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவம் செலுத்திகிறது, பின்பு உயர்தர மென்பொருள் மற்றும் வன்பொருளை தான் பயன்படுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோன்று உயர்தரம் கொண்ட இந்த டிராவல் பேக் பொருட்கள், சௌகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த எக்ஸ்ப்ளோரர் பேக் என்ற பெயரையும் பெற்றுள்ளது இந்த ஒன்பிளஸ் பேக்.

மழை நாட்களில்
இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக் சிறப்பசம் என்னவென்றால் முதுகில் ஒரு வசதியான buff வழங்குகிறது, எனவே ஐபேட் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களை எடுத்து செல்ல வசதியாக இருக்கும். மேலும் சிறந்த ஸ்டைல் வடிவமைப்புக் கொணடுள்ளது இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக். மழை நாட்களில், கடற்கரை அல்லது குளங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். நிச்சயமாக இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக் பல்வேறு இடங்களில்
பிரபலம் அடையும், ஆனாலும் இதன் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது.

துணி
சீனாவில் இருந்து Cordura கிளாசிக் துணியை பயன்படுத்த இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக் தயாரிக்கப்பட்டுள்ளது, எனவே அனைத்து சூழலுக்கும் ஏற்றவாறு பயன்படும். அதிகமான பயனம் செய்யும் பயனர்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்தினால் அருமையாக தான் இருக்கும். அதேசமயம் பொருட்கள்,ஆடைகள் போன்றவற்றை எடுத்த செல்லவும் மிகவும் சுலபமாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக்.

மடிப்பு கவர்
zipper, மடிப்பு கவர் இந்த ஒன்பிளஸ் டிராவல் பேக் உடன் கொடுக்கப்படுகிறது, பின்பு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த தயாரிப்பு அதிக விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசயம் விரைவில் இந்நிறுவனம் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் 5ஜி
ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications