1 இல்லை.. 2 இல்லை.. மொத்தம் 3 ஒன்பிளஸ் சாதனம்.. பண்டலாக வாங்கலாம்.. விலை என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனமானது, இப்போது ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G), ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) மற்றும் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) ஆகிய சாதனங்களை ஒரே பண்டல் பேக்கேஜாக தொகுத்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பண்டல் ஒன்பிளஸ் என்செம்பில் பண்டல் (OnePlus Ensemble Bundle) என்ற பெயருடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ் பண்டல் விலை ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாகும். இது மிகவும் விலை உயர்ந்தது போல் தெரிகிறதல்லவா? இது உண்மையிலேயே உங்களுக்கு மதிப்புள்ளதா? என்று பார்க்கலாம் வாங்க.

ஒன்பிளஸ் என்செம்பில் பண்டல் விலை பற்றி பேசுகையில் இது மொத்தமாக ரூ.1,13,997 என்ற விலையுடன் இப்போது வாங்க கிடைக்கிறது. இது எமெர்லண்ட் கிரீன் நிறத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) போனின் 16GB + 256GB மாடல், ஆர்பர் க்ரீனில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) மற்றும் ஹாலோ கிரீன் நிறத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) இன் 12GB + 256GB மாடல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது OnePlus இன் இணையதளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் ஐசிஐசிஐ வங்கி (ICICI) மற்றும் ஒன்கார்டில் (Onecard) மீது ரூ.4,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும் வழங்குகிறது. முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை No Cost EMI விருப்பமும் கிடைக்கிறது.OnePlus இன் இந்த பண்டல் உண்மையிலேயே நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்புமிக்கதா?
பொதுவாக பிராண்டுகள் இப்படி அதன் சாதனங்களை ஒரே பேக்கேஜ்ஜில் விற்பனை செய்வதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால், உண்மையில் இது பிராண்டின் தயாரிப்புகளை வாங்க வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதற்கான ஒரு சுவாரஸ்யமான வழியாகும் என்பதே உண்மை. முதலில், இந்தத் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் விலையையும் நீங்கள் தனித்தனியாக வாங்கினால், அவை உங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு தயாரிப்புகளும் அவற்றின் ஹை-எண்டு வகைகளில் விற்கப்படுகின்றன, எனவே அதே வகைகளின் விலைகளை நாம் ஆராய்வோம். OnePlus 11 5G மாடலின் சிறந்த விலை Amazon இல் ரூ. 61,999ஆகும். அதே நேரத்தில் OnePlus பேட் ரூ. 39,998 விலைக்கு விற்கப்படுகிறது. இறுதியாக, OnePlus Buds Pro 2 விலை ரூ.10,999 ஆகும். இவை ஒட்டுமொத்தமாக ரூ. 1,12,996 விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஒவ்வொரு சாதனத்தையும் தனித்தனியாக வாங்கினால், ஒன்பிளஸ் இன் பிரத்தியேக பேக்கேஜ் பண்டல் மூலம் நாம் மொத்தமாக செலவாகும் விலையை விட ரூ.1000 குறைவாக இருக்கிறது. இருப்பினும், ரூ. 4,000 சலுகையைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான கார்டுகள் உங்களிடம் இருந்தால், அதை வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இங்கேயும் ஒரு கேட்ச் உள்ளது.
அமேசான், HDFC கார்டுகளுடன் ஒன்பிளஸ் பேட் வாங்கினால் ரூ.2,000 வரை தள்ளுபடியும், ஒன்பிளஸ் 11 5ஜி போன் மீது ரூ.2,000 தள்ளுபடியும் வழங்குகிறது. இது OnePlus 11 இன் விலையை 59,999 ரூபாயாகவும், OnePlus Pad இன் விலை 37,998 ரூபாயாகவும் குறைக்கிறது. இந்த விலைகள் ரூ.97,997 ஆக இருக்கும்.

இப்போது, உங்களிடம் Amazon ICICI கிரெடிட் கார்டு இருந்தால், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 இல் வரம்பற்ற 5% கேஷ்பேக்கைப் பெறலாம், இதன் விலை ரூ.10,449 ஆகக் குறைக்கப்படுகிறது. ரூ.97,997 மற்றும் ரூ.10,449ஐச் சேர்த்தால் ரூ.1,08,446 விலைக்கு சமம். மீண்டும் இது பண்டல் சலுகை விலையான ரூ.1,09,997 விட குறைவாகும். இது ஒன்பிளஸ் என்செம்பில் பண்டலை விட ரூ. 1,000 குறைவாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, விலையின் அடிப்படையில், இந்த தயாரிப்புகளை தனித்தனியாக வாங்குவதற்கு நீங்கள் செலவழிப்பதை விட, பண்டல் பேக்கேஜ் உங்களுக்கு ரூ.1,000 அதிகமாக வசூலிக்கிறது. எப்படியிருந்தாலும், அமேசானிலிருந்து ஒவ்வொரு தயாரிப்புகளையும் தனித்தனியாக வாங்குவதை விட OnePlus என்செம்பில் பண்டல் உங்களுக்கு அதிகமாக செலவாகும் என்பதே உண்மையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








