ரூ.1/-க்கு ஸ்மார்ட்போன் புக் பண்ணிட்டீங்களா?

By Meganathan
|

தீபாவளிச் சலுகையின் அடுத்தக் கட்டம் துவங்கி விட்டது. ஒன்பிளஸ் நிறுவனமும் தனது கருவிகளை ரூ.1/- என்ற மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் துவங்கி விட்டது. மலிவு விலை விற்பனை ஃபிளாஷ் முறையில் அந்நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் நடைபெற்று வருகின்றது.

அதன் படி ஒன் பிளஸ் கருவிகளுக்கான ஃபிளாஷ் விற்பனைகள் துவங்கி விட்டன. இன்று துவங்கிய விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

நேரம்

நேரம்

அதன் படி இன்று துவங்கி தினமும் மதியம் 12.00 மணி, மாலை 4.00 மணி மற்றும் இரவு 8.00 மணிக்கு இந்தப் பிளாஷ் விற்பனை நடைபெறும். இன்றைய 12.00 மற்றும் 3.00 மணி விற்பனை நிறைவு பெற்றுவிட்டது.

விற்பனை

விற்பனை

ஒன்பிளஸ் இரண்டு ஃபிளாஷ் விற்பனைகளை நிறைவு செய்திருக்கும் நிலையிலும் இன்று இரவு, நாளை மற்றும் நாளை மறுநாள் என விற்பனை தினமும் நடைபெறுகின்றது.

முறை

முறை

ஒன்பிளஸ் பிளாஷ் விற்பனையில் கலந்து கொள்ள விரும்பும் பயனர்கள் ஒன்பிளஸ் இணையத்தள ஸ்டோரில் சைன் அப் செய்ய வேண்டும். பின் மொபைல் போன் நம்பர், மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இறுதியில் பயனர்கள் #DiwaliDashSale என்ற பதிவினை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மர்ம பெட்டி

மர்ம பெட்டி

மற்ற பிளாஷ் சேல் போன்று இல்லாமல் ஒன்பிளஸ் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன் படி பயனர்கள் மிஸ்ட்ரி பாக்ஸ் எனப்படும் மர்ம பெட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் கட்டாயம் ஏதேனும் ஒரு ஒன்பிளஸ் கருவி இருக்கும். இதில் ஒன்பிளஸ் 3 ரோஸ் கோல்டு போன் கூட இருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

ஒரு அக்கவுண்ட் மூலம் ஒருவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதனால் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு ஒருவர் பலமுறை கலந்து கொள்ளவும் முடியாது. மிஸ்ட்ரி பாக்ஸ் உங்களின் கார்ட்டில் சேர்க்கப்பட்டதும் பயனர்கள் ரூ.1/- செலுத்தி அதனுள் இருக்கும் பொருள் என்னவென்று அறிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்படாத பாக்ஸ்கள் மூன்று மணி நேரத்தில் திரும்பப் பெறப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Diwali Sale, Get smartphone for Rs.1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X