ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் சேவை இருக்காது: காரணம் இதுதான்!

|

இனி வெளியிடப்படும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் செயலிகள் மற்றும் சேவைகள் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட நிலையில் இருக்காது என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8டி மாடலில் பேஸ்புக் சேவைகள் இல்லை

ஒன்பிளஸ் 8டி மாடலில் பேஸ்புக் சேவைகள் இல்லை

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது. புதிதாக அறிமுகமான ஒன்பிளஸ் 8டி மாடலில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இல்லை. ஒன்பிளஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் நிறுவன செயலிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழத்தொடங்கியது.

ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட நிலையில் இருக்காது

ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட நிலையில் இருக்காது

இந்த நிலையில் இனி வெளியிடப்படும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் செயலிகள் மற்றும் சேவைகள் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட நிலையில் இருக்காது என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் வெளியிட்ட அறிக்கை

ஒன்பிளஸ் வெளியிட்ட அறிக்கை

இதுதொடர்பான ஒன்பிளஸ் அறிக்கையில், ஒன்ப்ளஸ் தனது புதிய தொலைபேசிகளில் பேஸ்புக் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட நிலையில் இருக்காது என உறுதிப்படுத்தியுள்ளது. இனி வரும் ஒன்பிளஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களிலும் இதே நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்யலாம்

தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்யலாம்

பேஸ்புக் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் தேவைப்படும் பயனர்கள் Google PlayStore-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒன்பிளஸ் ப்ரீ இன்ஸ்டால் தொடர்பான அறிக்கை பேஸ்புக் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல் முன்பே போனில் இருக்கும் மூன்றாம் தரப்பு செயலிகளை பயனர்கள் விரும்பினால் அகற்றிக் கொள்ளலாம்.

தீர்வு காணும் வாய்ப்புகள் உள்ளது

தீர்வு காணும் வாய்ப்புகள் உள்ளது

அதோடு ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு அப்டேட் டிசம்பர் 2020 க்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரவிருக்கும் ஆண்டுகளிலும் இதேநிலை தொடருமா என ஒன்பிளஸ் உறுதிப்பட தெரிவிக்கவில்லை. ஏனெனில் இதற்கு தீர்வு காணும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

source: bgr.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Confirmed Stops Preloading Facebook Apps on New Phones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X