சைலன்ட் சம்பவம்.. OnePlus-ன் அடுத்த அறிமுகம்.. பட்ஜெட் வாசிகள் ஹேப்பி.. ஏன்னா இதோட விலை அப்படி!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது, அதாவது ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) மாடலானது, சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 15 க்கு போட்டியாக இருக்குமா? அது எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்கனவே மேலோங்க தொடங்கிவிட்டன.
ஆனால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் எண்ணமும், செயலும் வேறு ஏதோவொரு தயாரிப்பில் இருப்பது போல் தெரிகிறது. முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் (X) தளத்தில், ஒன்பிளஸ் இந்தியா வெளியிட்டுள்ள டீசர் புகைப்படத்தின் வழியாக ஒன்பிளஸின் அடுத்த அறிமுகம் ஸ்மார்ட்போன் அல்ல என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸின் அடுத்த அறிமுகம் ஒரு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் ( New Android Tablet) ஆக இருக்கப்போகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் தனது முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட்-ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து ஒன்பிளஸ் இரண்டாவது டேப்லெட் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸின் இரண்டாவது டேப்லெட் ஆனது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go)ஏ என்று அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட்-இன் டோன்ட் டவுன் வெர்ஷனாக (Toned Down Version) இருக்கும். அதாவது இது ஒப்பீட்டளவில் சற்றே குறைக்கப்பட்ட அம்சங்களுடன், இன்னும் மலிவான விலைக்கு வரும்.
இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இது என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும் என்கிற யோசனை எங்களிடம் உள்ளது. இந்தியாவில் இது ரூ.25,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் ஆனது இந்தியாவில் ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில், ஒப்பீட்டளவில் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் விலை நிர்ணயம் மிகவும் மலிவானதாக இருக்கும், கூடவே ஒரு நல்ல டேப்லெட்டை தேடும் பட்ஜெட் வாசிகளின் கவனத்தையும் நிச்சயம் ஈர்க்கும். வரும் நாட்களில் ஒன்பிளஸ் பேட் கோ பற்றிய மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்கிறோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் அம்சங்களை பொறுத்தவரை, இது 2800 x 2000 பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Variable Refresh Rate), டால்பி விஷனுக்கான ஆதரவு உடனான 11.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் (Octa-core MediaTek Dimensity 9000 chipset) மூலம் இயக்கப்படுகிறது. 12ஜிபி ரேம் உடன் வரும் இந்த டேப்லெட் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டமை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன்ஓஎஸ் 13.1-ஐ பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது எல்இடி ஃபிளாஷ் (LED Flash) உடனான 13எம்பி சிங்கிள்-லென்ஸ் ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 8எம்பி கேமரா உள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் பேட்டில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மூலம் டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களும் உள்ளன.
கடைசியாக பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது நாள் முழுவதும் போதுமான பேட்டரி லைஃப்பை உறுதி செய்யும் ஒரு வலுவான 9510mAh பேட்டரியுடன் வருகிறது, இது 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை (67W SuperVOOC Fast Charging) ஆதரிக்கிறது, இது விரைவான மற்றும் திறமையான ரீசார்ஜிங்கை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications