OnePlus திடீர் அறிவிப்பு.. இந்த செப் மாதத்தில்.. இந்த 4 மாடல்களில் 1 உங்களிடம் இருந்தால்.. ரெடியா இருங்க!
நீங்களொரு ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் யூசர் ஆக இருந்ததால்.. உங்களிடம் "இந்த" 4 ஒன்பிளஸ் மாடல்களில் ஏதேனும் 1 இருந்தால்.. கொடுத்த வச்ச ஆளுப்பா நீங்க.. 2023 செப்டம்பர் மாசம் ஆரம்பிக்கும் போதே அதிர்ஷ்ட காற்று உங்க பக்கமா பலமா வீசுதே!
அப்படி என்ன அதிர்ஷ்ட காற்று வீசிவிட்டது? ஒன்பிளஸ் நிறுவனம் அப்படி என்ன விஷயத்தை அறிவித்து உள்ளது? கொடுத்து வச்ச 4 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் என்று கூறுகிறீர்களே.. அந்த 4 ஒன்பிளஸ் போன்களின் மாடல் பெயர்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஓஎஸ் (Next Generation OS) ஆன ஆக்ஸிஜன்ஓஎஸ்14 (OxygenOS 14) ஆப்ரேட்டிங் சிஸ்டமானது வருகிற செப்டம்பர் 25 அன்று வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ்-ன் இந்த லேட்டஸ்ட் வெர்ஷனை உடனே பெறும் 4 ஒன்பிளஸ் மாடல்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட (Android 14 OS Based) ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 ஆனது ஏற்கனவே பீட்டா வடிவத்தில் (Beta Form) டெஸ்டர்களுக்கு கிடைக்கிறது. இதற்கிடையில் தான் இது பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஆரம்பத்திலேயே இது எல்லா ஒன்பிளஸ் போன்களுக்கும் வந்து விடாது.
ஆக்ஸிஜன்ஓஎஸ்14 அப்டேட் ஆனது முதற்கட்டமாக 4 ஒன்பிளஸ் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகள் ஒன்பிளஸ் 11 (OnePlus 11), ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) ஆகும்.
ஆக்ஸிஜன்ஓஎஸ்14 வழியாக என்னென்ன மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்? ஆக்ஸிஜன்ஓஎஸ்14 ஆனது தனியுரிம செயல்திறன் தளமான (Proprietary Performance Platform) டிரினிட்டி இன்ஜின் (Trinity Engine) உடன் வரும். டிரினிட்டி எஞ்சின் ஆனது செயல்திறன் அல்லது பேட்டரி போன்ற பொதுவான ஸ்மார்ட்போன் சவால்களையும் நிவர்த்தி செய்யும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது.
இந்த எஞ்சினின் கீழ் சிபியு விட்டலைசேஷன் (CPU Vitalization) ரேம் விட்டலைசேஷன் (RAM Vitalization), ரோம் விட்டலைசேஷன் (ROM Vitalization), ஹைப்பர்பூஸ்ட் (HyperBoost), ஹைப்பர்டச் (HyperTouch) மற்றும் ஹைப்பர்ரெண்டரிங் (HyperRendering) உள்ளிட்ட ஆறு புதுமையான தொழில்நுட்பங்கள் உள்ளன.
இந்த தொழில்நுட்பங்கள் ஆனது மல்டி டாஸ்கிங் (Multi tasking), தீவிரமான மொபைல் கேமிங் (Intensive mobile gaming)) மற்றும் நீண்ட கால பயன்பாடு (Long-term usage) போன்ற சூழ்நிலைகளில் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்திற்கான (Fast and Smooth Performance) உத்தரவாதத்தை அளிக்கும் என்று ஒன்பிளஸ் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் ஒன்பிளஸின் இந்த புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 ஆனது, யூஸர் இன்டர்ஃபேஸில் (User Interface) சில தெளிவான மாற்றங்களையும் கொண்டு வருகிறது. லேட்டஸ்ட் வெர்ஷனின் கீழ் ஸ்மார்ட்போனில் உள்ள கண்ட்ரோல் பேனல் (Control panel) புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. ஐகான்களும் கூட போல்ட் (Bold) செய்யப்பட்டுள்ளன.
ஹோம்பேஜில் (Homepage) வசதியான "சேர்ச்" ஆப்ஷனும் உள்ளது; இதன்மூலம் பயனர்கள் குறைவான கிளிக்குகளில் ஆப்பை தேடலாம். இது ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் உள்ள ஆப்பிளின் ஸ்பாட்லைட்டை (Apple Spotlight) போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஃபைல்களை விரைவாக சேமிக்க, சைட்பாரில் ஒரு ஃபைல் டாக் (File Dock) ஒன்றும் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை (Stable Android 14 Update) வெளியிட தொடங்கியதும் வேறு என்னென்ன கூடுதல் அம்சங்கள் கிடைக்கிறது என்பது கண்டறியப்படும். இதற்கிடையில், விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone) ஆன ஒன்பிளஸ் ஓப்பனிலும் (OnePlus Open) கூட ஆக்ஸிஜன்ஓஎஸ்14 இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications








