அட்றா சக்கை.. முழுசா ரூ.22,000 தள்ளுபடி.. அடிதடி ஆர்டரில் திக்குமுக்காடும் OnePlus போன்.. என்ன மாடல்?
ஒன்பிளஸ் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலை இந்தியாவிலும், உலகளவிலும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலுடன் இணைந்து 2024 ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், இந்திய நுகர்வோருக்கான கம்யூனிட்டி சேல்-ஐ (OnePlus Community Sale) அறிவித்துள்ளது. ஒன்பிளஸின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இயர்பட்ஸ்கள் மீது பெரிய அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கிய ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல், வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியோடு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ் என்னென்ன ஒன்பிளஸ் தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி (OnePlus 10 Pro 5G): ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது குறிப்பிடத்தக்க தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.17,000 கூப்பன் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒன்கார்டு மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டு பயனர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மொத்தமாக ரூ.22,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் வழக்கமான விற்பனை விலை ரூ.66,999 ஆகும். இருப்பினும் ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் ஆபர்களின் கீழ் இதை ரூ.44,999 க்கு வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி-யின் முக்கிய அம்சங்கள்: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Gen 1) சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே, 12ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 80W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் மெயின் கேமரா + சாம்சங் ISOCELL JN1 சென்சாரை கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா + 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad): ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.37,499 ஆகும். தற்போது இது ரூ.35,499 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயனர்கள் ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியை பெற்று இந்த டேப்லெட்டின் விலையை ரூ.30,499 ஆக குறைக்கலாம். இதே டேப்லெட்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகள்: ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) இயர்பட்ஸின் அசல் விலை ரூ.11,999 ஆகும். ஐசிஐசிஐ பேங்க் கார்டு அல்லது ஒன்கார்டு வழியாக வாங்கினால் இதை ரூ.8,999 க்கு வாங்கலாம். இதேபோல ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்2 (OnePlus Buds Z2) ரூ.3,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 சீரிஸ் (OnePlus Nord Buds 2 Series) மற்றும் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் சீரிஸ் (OnePlus Bullet Wireless Series) மீதும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. இவ்விரண்டும் முறையே ரூ.2,499 மற்றும் ரூ.1,499 என்கிற தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








