செஞ்சுவிட்ட OnePlus.. புதுசா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? OnePlus Buds Pro 3 Sapphire Blue விலை என்ன?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இன்று நடத்திய வின்டர் லான்ச் ஈவென்ட்டில் (OnePlus Winter Launch Event) ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனுடன், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஸபையர் ப்ளூ இயர்பட்ஸ் (OnePlus Buds Pro 3 Sapphire Blue) வேரியண்ட் மாடலையும் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் TWS இயர்பட்ஸ் (OnePlus TWS Earbuds) சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.
புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஸபையர் ப்ளூ இயர்பட்ஸ் சாதனம் புதிய அம்சங்களுடன் வெளிவந்த புதிய வேரியண்ட் மாடல் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 13 மிட்நைட் ஓஷனைப் (OnePlus 13 Midnight Ocean) வேரியண்ட் மாடலின் நிறத்துடன் ஒத்துப்போகும் புதிய வண்ண விருப்பமாக OnePlus Buds Pro 3 Sapphire Blue அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சுவிட்ட OnePlus.. புதுசா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
தெரியாதவர்களுக்கு, OnePlus Pro 3 சில காலமாக இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள OnePlus Buds Pro 3 Sapphire Blue TWS Earbuds அம்சங்கள் எல்லாம் அப்படியே முந்தைய மாடலை போலவே இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் நிறத்தை மட்டுமே மாற்றியுள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3, சாதனத்தில் டூயல் டிரைவர்கள் (Dual drivers) மற்றும் DAC-கள் உள்ளன. இது ரிச் பாஸ் (Rich BASS) மற்றும் மிருதுவான ட்ரெபிளுடன் (treble) சக்திவாய்ந்த ஒலியை வழங்குகிறது.
இந்த சாதனம் 50dB வரை ANC (Adaptive Noise Cancellation) உடன் திறந்த பகுதிகளில் 360 மீட்டர் புளூடூத் ரேஞ் (Bluetooth range) வரம்பைக் கொண்டுள்ளது. இது வலுவான, நம்பகமான இணைப்புகளுக்கு ஸ்டெடி கனெக்ட் (Steady Connect) அம்சம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. OnePlus 13 தொடர்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது, புதிய AI டிரான்ஸ்லேஷன் (AI Translation) அம்சம் பயனர்கள் நிகழ்நேர உரையாடல்களை மொழிபெயர்க்க (translate real-time conversations) அனுமதிக்கிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஸபையர் ப்ளூ இயர்பட்ஸ் (OnePlus Buds Pro 3 Sapphire Blue Earbuds):
இந்த புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஸபையர் ப்ளூ இயர்பட்ஸ் (OnePlus Buds Pro 3 Sapphire Blue Earbuds) சாதனம் 10 நிமிட சார்ஜிங்கிற்குப் பிறகு 5+ மணிநேரம் பிளேபேக்கை வழங்குகின்றது. மேலும் சார்ஜிங் கேஸுடன் (charging case) 43 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேடைம் நேரத்தை வழங்குகிறது.
மற்ற அம்சங்களில் கூகுள் ஸ்பேஷியல் ஆடியோ (Google Spatial Audio), டச் கன்ட்ரோல்கள் (ouch controls) மற்றும் IP55 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (IP55 water resistance) ஆகியவை அடங்கும். OnePlus Buds Pro 3 ஆனது 566mAh பேட்டரியை சார்ஜிங் கேஸ் உடன் பேக் செய்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், புதிய OnePlus Buds Pro 3 Sapphire Blue Earbuds ரூ.11,999 என்ற விலையுடன் வருகிறது.
ஜனவரி 10, 2025ம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். ஜனவரி 26, 2025 ஆம் தேதி வரை OnePlus Buds Pro 3 Sapphire Blue Earbuds வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 நேரடி தள்ளுபடி கிடைக்கும். ICICI வங்கி பயனர்களுக்கு கூடுதல் ரூ. 1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் வெறும் ரூ. 9,999 விலையில் இந்த சாதனத்தை நீங்கள் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








