Home
News

சுத்தி முத்தி எவன் கத்தினாலும் கேட்காது.. 55dB ஹைப்ரிட் ANC.. அடேங்கப்பா விலையில் OnePlus Buds 4 அறிமுகம்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில், வரும் 2025 ஜூன் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய இயர்பட்ஸ் முந்தைய மாடல்களை விட பல மேம்பாடுகளை கொண்டு வருகின்றன: இதில் மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன், சிறந்த ஆடியோ செயல்திறன் மற்றும் சில ஸ்மார்ட் ஏஐ அம்சங்கள் உள்ளன. முக்கியமான சிறப்பம்சமாக இதன் 55dB ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆனது இப்போது 5.5kHz வரையிலான பரந்த ப்ரெக்வன்சி வரம்பை வழங்குகிறது.

அடேங்கப்பா விலையில் OnePlus Buds 4 அறிமுகம்!

இதன் பொருள், நீங்கள் நெரிசலான தெருவில் இருந்தாலும் சரி அல்லது பரபரப்பான ஓட்டலில் இருந்தாலும், அதிக அளவிலான சுற்றுச்சூழல் இரைச்சலை தடுக்கும் வகையில் இந்த இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கூடவே இந்த பட்ஸ்-ன் வடிவமைப்பும் நேர்த்தியாக உள்ளது. இது இரண்டு நேர்த்தியான வண்ணங்களில் வருகின்றன: பைன் கிரீன் மற்றும் ஸ்பேஸ் கிரே; இரண்டுமே பிரீமியம் டச் -ஐ சேர்க்கும் மேட் மெட்டாலிக் பினிஷ் உடன் வருகின்றன .

ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஒரு முழுமையான மேம்படுத்தலாக தன்னை நிலைநிறுத்துகிறது, அதே நேரத்தில் விலை அடிப்படையில் ஒப்பீட்டளவில் மலிவானதாகவும் உள்ளது. சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.5,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள இதை ரூ.4,950 என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த இயர்பட்ஸ் மே 27 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். உலகளாவிய வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி இது ஜூன் 5 ஆம் தேதி ஒன்பிளஸ் 13எஸ் உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பட்ஸ் 3 இந்தியாவில் ஒரு உறுதியான விருப்பமாக திகழ்கிறது. இது ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் 3 விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது 15 ஹெர்ட்ஸ் - 40 கேஹெர்ட்ஸ் ப்ரெக்வன்சி ரேன்ஜை (frequency range of 15Hz-40KHz)கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் 10.4மிமீ கோ-ஆக்ஸியல் டூயல்-யூனிட் ட்ரைவரையும் (10.4mm co-axial dual-unit driver.) கொண்டுள்ளன.

மேலும் இந்த இயர்பட்ஸ் ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக்குகளை ஆதரிக்கின்றன, இது மற்ற கோடெக்குகளை (codecs) விட சிறந்த ஒலி தரத்தை வழங்க உதவும். ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது எல்எச்டிசி 5.0 ஹை-ரெஸ் ஆடியோவை (LHDC 5.0 Hi-Res Audio) ஆதரிக்கின்றன. இது 1எம்பிபிஎஸ் வரையிலான வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்-ஐ அனுமதிக்கிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் 3-ல் மொத்தம் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன, இது கால்களின் போது தெளிவான ஆடியோவை வழங்க உதவும். மேலும் இந்த இயர்பட்ஸ் 94ms லோ லேடன்சியையும் கொண்டுள்ளன. கூடுதலாக, ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது டச் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, இது மூன்று வகையான ஏஎன்சி ஆதரவுகளை கொண்டுள்ளது: மைல்ட் (10 dB), மாடரேட் (20 dB) மற்றும் டெப்த் (49 dB). மேலும் இந்த இயர்பட்ஸ் 3டி சரவுண்ட் ஸ்பேஸ் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் டைனமிக் பாஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இயர்பட்களை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 6.5 மணிநேரம் வரை நீடிக்கும், சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 28 மணிநேரம் வரை நீடிக்கும். ஒருவேளை ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 10 மணிநேரம் வரை நீடிக்கும், கேஸ் உடன் சேர்த்து 44 மணிநேரம் வரை நீடிக்கும்.

கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது மொத்தம் 7 ​​மணிநேரம் வரையிலான ம்யூசிக் பிளேபேக்கை வழங்கும். க்ளாஸி ஃபினிஷ் டிசைன் மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோவை போலவே தோற்றமளிக்கும் சார்ஜிங் கேஸுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Buds 4 with 55 dB hybrid active noise cancellation Launched Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X