ஒன்பிளஸ் குடியரசு தின சலுகை: பிரமிக்க வைக்கும் தள்ளுபடி-ஒன்பிளஸ் 8டி,நோர்ட் மற்றும் டிவிகள் வாங்க சரியான நேரம்

|

பெரும்பாலான பயனர்களின் சிறந்த எலக்ட்ரானிக்ஸ் பிராண்டாக கருதப்படுவது ஒன்பிளஸ். இந்த நிறுவனத்தின் மாறுபட்ட தயாரிப்புகளால் முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ சாதனங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை தெரிவிக்க சிறந்த வழிகளை கண்டறிந்து வருகிறது. அதன்படி இம்முறை ஒன்பிளஸ் நிறுவனம் குடியரசு தின சலுகைகளை அறிவித்துள்ளது.

உலகளாவிய முன்னணி ப்ரீமியம் தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸ், தங்களது இந்திய நுகர்வோருக்கான பிரத்யேக குடியரசு தின சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் சாதனங்கள், டிவிக்கள் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்கள் இன்றுமுதல் பெறலாம். இன்று தொடங்கும் இந்த சலுகை ஜனவரி 26 வரை பெறலாம். பயனர்கள் பெறும் அற்புதமான தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8டி 5 ஜி

குடியரசு தின சலுகை: ஒன்பிளஸ் 8டி, நோர்ட், டிவிகள் வாங்க சரியான நேரம்!

பல்வேறு உயர்தர அதிநவீன அம்சங்களை கொண்டது ஒன்பிளஸ் 8டி 5 ஜி ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. டிராகன் ஃபாஸ்ட் சார்ஜ் வேகம், சிறந்த கேமரா திறன்கள் உள்ளிட்ட சிறந்த அம்சங்கள் இதில் இருக்கிறது. முதலில் ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.42,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஒன்பிளஸ் 8டி 5 ஜி ஸ்மார்ட்போன் அக்வாமெரைன் க்ரீன் மற்றும் லூனார் சில்வர் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 19 முதல் ஜனவரி 23 வரையிலான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.38,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ரூ.2,500 அமேசான் கூப்பன்கள் மற்றும் ரூ.1500 எஸ்பிஐ கிரெடிட் கார்ட் தள்ளுபடி என மொத்தம் ரூ.4000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

இதோடு முடிவடையவில்லை, ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். எச்டிஎஃப்சி வங்கி கார்ட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடியும், ஒன்பிளஸ்.இன் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் ஈசிஇஎம்ஐயும் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவிகள்

குடியரசு தின சலுகை: ஒன்பிளஸ் 8டி, நோர்ட், டிவிகள் வாங்க சரியான நேரம்!

தொடர்ந்து சிறந்த வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளில் முனைப்பு காட்டுகிறது ஒன்பிளஸ். அதன்படி நினைத்துக்கூட பார்க்கமுடியாத சினிமா அனுபவத்துடன் ஒன்பிளஸ் டிவி ஒய் மற்றும் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 வருகிறது. இரண்டு தொலைக்காட்சி தொடர்களும் ஒப்பிட முடியாத செயல்திறனை வழங்கும் மென்பொருள் மற்றும் டால்பி ஆடியோ அமைப்புடன் வருகிறது. ரூ.14,999 என்ற மதிக்கத்தக்க மலிவு விலையில் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் டிவிகள் வருகிறது.

ஒன்பிளஸ் டிவி க்யூ 1 சீரிஸ் டால்பி விஷன், 55 இன்ச் 4 கே க்யூஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் டால்பி அட்மோஸ் 50வாட்ஸ் 8 ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. டைனமிக் பிக்சர் தரத்துடன் சரவுண்ட் சவுண்ட் அனுபவம் இதில் பெறலாம்.

ஒன்பிளைஸ் டிவி க்யூ 1 தொடரின் விலை ரூ.62,900 ஆக உள்ளது. ஆனால் ஒன்பிளஸ் குடியரசு தின விற்பனை சலுகையில் நீங்கள் இந்த இரண்டு தொடர்களிலும் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். ஒன்பிளஸ் டிவி க்யூ சீரிஸுக்கு உடனடி ரூ.4,000 தள்ளுபடி மற்றும் ஒன்பிளஸ் டிவி ஒய் தொடருக்கு எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்ட் இஎம்ஐ மற்றும் டெபிட் கார்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் டிவி ஒய் சீரிஸ் 43 இன்ச் மாடலுக்கு ரூ.1,000 தள்ளுபடி, ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 32 இன்ச் மாடலுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட்

குடியரசு தின சலுகை: ஒன்பிளஸ் 8டி, நோர்ட், டிவிகள் வாங்க சரியான நேரம்!

ஸ்மார்ட்போன்கள் தொழிலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது ஒன்பிளஸ் நோர்ட். முதன்மை ரக அம்சங்கள் சாதனங்களை மலிவு விலையில் வழங்குவது ஒன்பிளஸ் நிறுவனம் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி 5ஜி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் என்90 ஹெர்ட்ஸ் திரவ அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் சிறந்த கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் ப்ளூ மார்பிள், கிரே ஆஷ் மற்றும் கிரே ஓனிக்ஸ் என்று மூன்று கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.27,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.29,999 ஆக இருந்தது. ஆனால் இந்த குடியரசு தின விற்பனையில் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு எச்டிஎஃப்சி வங்கி டெபிட்கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.500 தள்ளுபடியும் கூடுதலாக ஆறுமாத நோகாஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் ஆபரணங்களின் தள்ளுபடிகள்

குடியரசு தின சலுகை: ஒன்பிளஸ் 8டி, நோர்ட், டிவிகள் வாங்க சரியான நேரம்!

குடியரசு தின விற்பனையில் ஒன்பிளஸ் பவர்பேங்க் போன்ற சாதனங்கள் ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்களில் ரூ.999 முதல் கிடைக்கிறது. அதே தளங்களில் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் சீரிஸ் ரூ.1,899-க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ்கள் ரூ.4,699 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, அதேபோல் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ரூ.2,799 என்ற விலையில் கிடைக்கும்.

கூடுதலாக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் பேஸ் எடிஷன், ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் அமேசான்.இன், பிளிப்கார்ட்.காம், ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்ஸ் மற்றும் கூட்டாளர் ஸ்டோர்களில் 5 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரெட் கேபிள் கிளப் நன்மைகள்

குடியரசு தின சலுகை: ஒன்பிளஸ் 8டி, நோர்ட், டிவிகள் வாங்க சரியான நேரம்!

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கான அறிவிப்பாக ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் ஒன்பிளஸ்.இன் மூலம் சாதனங்கள் வாங்கும்போது ரூ.100 தள்ளுபடி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ரெட் கேபிள் பிரைவ், ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் ஒன்பிளஸ் 8, 8ப்ரோ, ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஒன்பிளஸ் பவர் பேங்க் வாங்குவதற்கான இலவச வவுச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 31 வரை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்பிளஸ் 3 முதல் ஒன்பிளஸ் 6டி வரையிலான ஸ்மார்ட்போன் மாடல்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பேட்டரி மாற்றுவதற்கு 50 சதவீத தள்ளுபடி பெறுவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரை இருக்கிறது. மேலும் ஒரு பிரத்யேக சலுகையாக ரெட் கேபிள் பிரைவில் அழைப்பு குறியீடு(invite Code) தேர்வை அணுகி ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் வாங்கும் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு பிரத்யேக ஒன்பிளஸ் அர்பன் டிராவலர் பின்புற பேக் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Brings Republic Day Offers: Best Time To Buy OnePlus 8T, OnePlus Nord & OnePlus TVs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X