ஜனவரி 11: OnePlus Band இந்தியாவில் அறிமுகம்.. முக்கிய சிறப்பம்சம் மற்றும் விலை விபரம்..
ஒன்பிளஸ் நிறுவனம் ஜனவரி 11ம் தேதியான நாளை, தனது புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் ஆன்லைன் வழியாகக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலுடன் புதிய ஒன்பிளஸ் பேண்டின் சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் பக்கத்திலிருந்து நாளை இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னரே தெரிவிக்கப்பட்டது போல், இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் முதற்கட்டமாக ஆன்லைனில் மட்டுமே வாங்குவதற்குக் கிடைக்கும், அதற்குப் பின்னர் சிறிய இடைவெளியில் ஒன்பிளஸ் ஷோரூம் கடைகளிலும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் குறித்த முக்கிய தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடாமல் பத்திரமாக வைத்துள்ளது. ஆனால், அமேசான் தலத்தில் இந்த புதிய சாதனத்திற்காக ஒரு பிரத்தியேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில முக்கிய குறிப்புகளை அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பேண்ட் 14 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இதில் ரியல் டைம் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 மானிடர், ஸ்லீப் மானிட்டர், 13 வகையான ஸ்போர்ட்ஸ் மோடு, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், டூயல் கலர் ஸ்ட்ராப், சீம்லெஸ் ஒன்பிளஸ் போன் கனெக்டிவிட்டி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஒன்பிளஸ் பேண்ட் 1.1' இன்ச் டிஸ்பிளேவுடன் இந்தியச் சந்தையில் ரூ.2499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications