ரூ.8000 வரை தள்ளுபடி: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகளை இப்போதே வாங்கலாம்!

|

ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ ஆகியவை ரூ.8,000 வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் ஆகியவை ஒன்பிளஸின் பிரபலமான ஸ்மார்ட்போன்களாகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 9 வரை நடைபெறும் ப்ரொமோஷனல் கேம்பைனின் ஒரு பகுதியாக நிறுவனம் சலுகைகளையை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மூலம், ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியையும் அட்டகாச தள்ளுபடியில் வாங்கலாம். ப்ரொமோஷனல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் தயாரிப்புகளை வாங்க ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ .8,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸின் புதிய சலுகை

ஒன்பிளஸின் புதிய சலுகை

ஒன்பிளஸின் புதிய சலுகை எல்லா தயாரிப்புகளுக்கும் கிடைக்கவில்லை. ஒன்ப்ளஸ் நோர்ட், ஒன்பிளஸ் 7 டி, ஒன்பிளஸ் 8, 8 ப்ரோ மற்றும் ப்ரீமியம் ஒன்பிளஸ் க்யூ 1 டிவிகள் உட்பட பல பிரபலமான தயாரிப்புகள் இந்த சலுகையில் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. இந்த தயாரிப்புகளுக்கான சலுகைகள் அமேசான் இந்தியா வலைத்தளம், ஒன்பிளஸ் கடைகள் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் ஐசிஐசிஐ வங்கி சலுகை

ஒன்பிளஸ் ஐசிஐசிஐ வங்கி சலுகை

செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 9 வரை ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பிளஸ் சாதனங்கள் வாங்கும்போது கவர்ச்சிகரமமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் நிறுவனம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட தயாரிப்புகளை வாங்கும் போது உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்கள்

விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்கள்

சலுகையின் ஒரு பகுதியாக ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் சாதனங்களை வாங்கும் போது நிறுவனம் விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்களை வழங்குகிறது. விலை இல்லாத EMI விருப்பத்துடன் சாதனங்களை வாங்கும் போது, ​​நீங்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை EMI காலத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த இஎம்ஐ சலுகை குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் பரிவர்த்தனைகளில் கிடைக்கிறது.

ஒன்பிளஸின் புதிய சலுகை

ஒன்பிளஸின் புதிய சலுகை

ஒன்பிளஸின் புதிய சலுகை நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. அத்துடன் 3 அல்லது 6 மாத செலவில்லா இஎம்ஐ விருப்பத்துடன் சாதனங்களை வாங்கும் போது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ .3,000 வரை உடனடி தள்ளுபடியை அளிக்கிறது. இதேபோல், ஒன்பிளஸ் 7 டி மற்றும் 7 டி ப்ரோ சாதனங்களும் 3 அல்லது 6 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் ரூ.3,000 உடனடி தள்ளுபடியைப் பெறுகின்றன.

ரூ.8,000 வரை உடனடி தள்ளுபடி

ரூ.8,000 வரை உடனடி தள்ளுபடி

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்டின் டாப் எண்ட் வேரியண்டின் விலை ரூ .29,999. விலை இல்லா இஎம்ஐ விருப்பத்தின் மூலம் இந்த சாதனத்தை வாங்கும்போது, ​​உங்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். இந்த சாதனத்தை வாங்க மூன்று மாதம் கட்டணமில்லா EMI விருப்பத்தை நிறுவனம் வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக, பிரீமியம் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 மற்றும் க்யூ 1 ப்ரோ ஸ்மார்ட் டிவிக்கள் 3 முதல் 6 மாதங்களுக்கு விலை இல்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் உடனடி தள்ளுபடியுடன் வருகின்றன. ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ வேரியண்ட்க்கு ரூ.8,000 வரை உடனடி தள்ளுபடியுடன் வருகிறது. ஒன்பிளஸ் டிவி கியூ 1 க்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Announced Upto Rs.8000 Discount For its Smartphones and Smarttv's

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X