Home
News

OnePlus Diwali 2023 Sale: அடேங்கப்பானு.. வாய் பிளக்க வைக்கும் ஆபர்.. OnePlus 11 முதல் OnePlus Nord CE 3 வரை!

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை வருகிற அக்.8 முதல் அக்.15 வரை நடக்குமென்றும், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அக்.8 முதல் தொடங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம், 2023 ஆம் ஆண்டுக்கான அதன் தீபாவளி சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் தீபாவளி 2023 சேல் (OnePlus Diwali 2023 Sale ) என்கிற பெயரின்கீழ் நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? இந்த விற்பனையின் கீழ் என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இயர்பர்ஸ் மீது.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

OnePlus Diwali 2023 Sale: அடேங்கப்பானு.. வாய் பிளக்க வைக்கும் ஆபர்!

எப்போது தொடங்கும், எப்போது முடியும்? 2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி விற்பனையானது சரியாக எந்த தேதியில் தொடங்கும் மற்றும் எந்த தேதியில் முடியும் என்கிற தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் என்னென்ன தயாரிப்புகளின் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற பட்டியல் ஒன்பிளஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன ஒன்பிளஸ் போன்கள் ஆஃபர் விலையில் வாங்க கிடைக்கும்? ஒன்பிளஸ் இந்தியா இணையதளத்தின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப்பை பயன்படுத்தி ஒன்பிளஸ் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு - 18 மாதங்கள் வரையிலான இஎம்ஐ விருப்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் இலவச அக்ஸசெரீஸ் - போன்ற சில பிரத்யேக நன்மைகள் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபஃர்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போன் ஆனது, வங்கி சலுகைகள் உட்பட ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். மேலும் கூப்பனை பயன்படுத்தி கூடுதலாக ரூ.4000-ஐ சேமிக்க முடியும் மற்றும் பட்ஸ் இஸட்2 டிடபுள்யூஎஸ் (Buds Z2 TWS) இயர்போன்ஸை இலவசமாக வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி தற்போது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் இந்த விற்பனையின் போது (வங்கி சலுகைகள் உட்பட) ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,499 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போன் ரூ.28,999 க்கும் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கும் வாங்க கிடைக்கும்.

டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மீதான ஆபஃர்களை பொறுத்தவரை (வங்கி தள்ளுபடிகள் உட்பட), கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் பட்டோ 2 டிடபுள்யூஎஸ் (OnePlus Buds Pro 2 TWS) இயர்போஸ் ஆனது ரூ.7,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 டிடபுள்யூஎஸ் (OnePlus Nord Buds 2 TWS) இயர்பட்ஸ் ரூ.2,299, க்கும் வாங்க கிடைக்கும்.

வயர்டு இயர்போன்ஸ் மீதான ஆபஃர்களை பொறுத்தவரை (வங்கி தள்ளுபடிகள் உட்பட), ஒன்பிளஸ் புல்லெட்ஸ் வயர்லெஸ் இஸட்2 (OnePlus Bullets Wireless Z2) ஆனது ரூ.1,349 க்கு வாங்க கிடைக்கும். இதே போல ஒன்பிளஸ் நோர்ட் வயர்டு இயர்போன் (OnePlus Nord Wired Earphone) ஆனது ரூ.599 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் தீபாவளி 2023 விற்பனையின் போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இது வங்கி சலுகைகள் உட்பட ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும். மேலும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டும் கூட விற்பனைக்கு வருமென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் கோ இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இது அக்டோபர் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் தான் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் விலை நிர்ணயமும் அறிவிக்கப்படும்.

ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி மீதான ஆபஃர்களை பொறுத்தவரை (வங்கி தள்ளுபடிகள் உட்பட), ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் (OnePlus Nord Watch) ஆனது இந்த தீபாவளி விற்பனையின் போது ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கும். மறுபுறம்,ஒன்பிளஸ் டிவி 65 க்யூ2 ப்ரோ (OnePlus TV 65 Q2 Pro) ஸ்மார்ட் டிவியானது ரூ.5000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Announced Diwali 2023 Sale Discounts on Smartphones Earbuds Tablet Watch TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X