பண்டிகையை கொண்டாடுங்கலே.. OnePlus அறிவித்துள்ள 2 வகை ஆபர்.. போன், வாட்ச், பட்ஸ் மீது டிஸ்கவுண்ட்!
2025 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பல வாரங்கள் உள்ளது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனமானது இம்மாத இறுதியில் தொடங்கும் நவராத்திரி பண்டிகையுடன் சேர்த்து வருகிற தீபாவளி பண்டிகை வரை அனைத்தையும் உள்ளடக்கிய பெஸ்டிவல் சேல் ஒன்றை அறிவித்து அதகளம் செய்துள்ளது
சுவாரசியமாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த சொந்த பண்டிகை கால சலுகைகள் ஆனது அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கும் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோருக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆக நீங்கள் ஒரு புதிய ஒன்பிளஸ் போன், ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஒன்பிளஸ் இயர்பட்ஸை வாங்க விரும்பினால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு விஷயங்கள் (2 வகையான சலுகைகள்) உள்ளன.

1. அமேசான் பே யுபிஐ மூலம் அமேசானில் கேஷ்பேக்: அமேசான் இந்தியா வலைதளத்தில், அமேசான் பே யுபிஐ (நான்-இஎம்ஐ) மூலம் பணம் செலுத்தினால், ரூ.2,999 க்கு மேல் உள்ள ஆர்டர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது 5% கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த கேஷ்பேக் ஆனது 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்கீழ் உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்ட 24 மணி நேரத்திற்குள், உங்களுக்கான கேஷ்பேக்கை கிரெடிட் செய்வதாக அமேசான் இந்தியா வலைத்தளம் உறுதியளிக்கிறது.
ஆக புதிய ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் பெரிய 7100mAh பேட்டரியுடன் கூடிய நோர்ட் சிஇ5 அல்லது பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 13 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது பண்டிகை கால சலுகைகளை நீங்கள் எதிர்பார்த்திருந்தால், அதை பெற தீபாவளி முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போதே அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக அதை பெறலாம். ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் (OnePlus Nord Buds) போன்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் மீதும் கூட இந்த சலுகை கிடைக்கும்.
2. ஒன்பிளஸ் ஸ்டோரில் ஸ்பின் & வின்: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சொந்த வலைத்தளத்தில் செப்டம்பர் 4 முதல் 13 வரை ஸ்பின் & வின் என்கிற பிரச்சாரத்தை நடத்துகிறது. இது ரெட் கேபிள் கிளப் (Red Cable Club) உறுப்பினர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்; மேலும் நுழைவிலும் சில எல்லைகள் உள்ளன: ஒரு ஸ்பினுக்கு 10 ரெட்காயின்ஸ் உறுப்பினர்கள் மட்டுமே. மேலும் உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை ஸ்பின் செய்யலாம்
அதே நேரத்தில் எலைட் (Elite) மற்றும் மேஸ்ட்ரோ (Maestro) உறுப்பினர்கள் கூடுதல் முயற்சிகளை பெறுவார்கள். இதன்கீழ் கிடைக்கும் பரிசுகள் மாறுபடும். அதாவது நீங்கள் இன்னும் அதிக ரெட் காயின்களை பெறலாம், கூப்பன்களை பெறலாம் அல்லது ஒன்பிளஸ் நோர்ட் 5 அல்லது ஒன்பிளஸ் 13 போன்ற இலவச தயாரிப்புகளை கூட பெறலாம்.
லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications