Home
News

Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ (Oppo) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே Oppo போன்களுக்கான அணுகல் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்களுக்கு OnePlus போன்களுக்கான அணுகல் அமெரிக்காவில் கிடைக்கிறது. அதேபோல், ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு OnePlus மற்றும் Oppo ஆகிய 2 போன்களுக்கான அணுகல் கிடைக்கிறது.

Oppo மற்றும் OnePlus நிலை தலைகீழாக மாறியதா?

Oppo மற்றும் OnePlus நிலை தலைகீழாக மாறியதா?

இது தான் முன்பு இருந்த நிலை, ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜெர்மனியில், துரதிர்ஷ்டவசமாக, இனி Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்குக் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு Nokia தான் முக்கிய காரணம். நோக்கியா நிறுவனம் என்றதும் HMD குளோபல் நிறுவனத்தை நினைத்து விடாதீர்கள், Nokia ஸ்மார்ட்போன் பிராண்டின் உரிமையாளராக பினிஷ்டு உபகரணங்களை சப்ளை செய்யும் நோக்கியாவை பற்றித் தான் இங்குக் கூறுகிறோம்.

Oppo மற்றும் OnePlus மீது நோக்கியா தொடர்ந்து வழக்கு

Oppo மற்றும் OnePlus மீது நோக்கியா தொடர்ந்து வழக்கு

ஸ்மார்ட்போன் பிராண்டின் உரிமையாளரான நோக்கியா நடத்தி வரும் காப்புரிமை வழக்கு அடிப்படையில் Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களின் விற்பனை இப்போது ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இன்று முதல் ஜெர்மனியில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி, இப்போது இந்த இரண்டு பிராண்ட்களின் புதிய சாதனங்கள் வாங்க கிடைப்பதில்லை.

Oppo மற்றும் OnePlus போன்களின் விற்பனைக்கு தடை

Oppo மற்றும் OnePlus போன்களின் விற்பனைக்கு தடை

நீங்கள் Oppo மற்றும் OnePlus இன் இணையதளங்களின் ஜெர்மன் பதிப்புகளை ஆன்லைனில் வாங்க முயற்சி செய்தால், உங்களால் புதிய போன்களை இப்போது வாங்க முடியாது என்பதைக் காணலாம். இந்த தடை புதிய விற்பனைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே ஜெர்மனியில் வாங்கிய Oppo மற்றும் OnePlus போன்களை இது எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

பணம் கொடுக்காமல் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதா Oppo மற்றும் OnePlus?

பணம் கொடுக்காமல் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதா Oppo மற்றும் OnePlus?

இந்த பிராண்டுகளின் போன் உங்களிடம் இருந்தால், உங்கள் சாதனம் வழக்கம் போல் வேலை செய்யும். ஜெர்மனியில் விற்கப்படும் புதிய போன்களுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும். சரி, இப்போது Oppo மற்றும் OnePlus போன்களின் விற்பனை என்ன காரணத்தினால் நிறுத்தப்பட்டது என்று பார்க்கலாம். முக்கியமாக, Oppo மற்றும் OnePlus ஆகியவை தங்கள் ஸ்மார்ட்போன்களில் காப்புரிமை பெற்ற 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகப் பல ஆண்டுகளாக நோக்கியா வாதிட்டு வந்தது.

இந்த சிக்கலில் இருந்து ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் தப்பிக்க தீர்வு தான் என்ன?

இந்த சிக்கலில் இருந்து ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் தப்பிக்க தீர்வு தான் என்ன?

இந்த காப்புரிமைகளுக்கு நிறுவனங்கள் பணம் செலுத்தாததால், இந்த சிக்கலைச் சரிசெய்யும் வரை விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நோக்கியா நீதிமன்றத்தில் வாதிட முயன்றது. தற்போது நோக்கியாவின் பக்கம் ஜெர்மன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, இந்த விற்பனை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சட்டப்பூர்வமாக Oppo மற்றும் OnePlus அதன் காப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நோக்கியாவிற்கு பணம் செலுத்திய பிறகு தான் விற்பனையைத் துவங்க முடியும்.

இரண்டு நிறுவனங்களும் 'இதை' செய்யலாம்.. ஆனால்!

இரண்டு நிறுவனங்களும் 'இதை' செய்யலாம்.. ஆனால்!

அல்லது, இதற்கு மாறாக, இந்த இரண்டு நிறுவனங்களும் நோக்கியாவிற்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க, எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டும் அகற்றலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இப்போது எழுந்துள்ள விற்பனை தடை சிக்கலை இது தீர்க்காது என்பதே உண்மை. நாம் குறிப்பிட்டுள்ளபடி, Oppo மற்றும் OnePlus ஜெர்மனி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளிலும் இந்த தடை விதிக்கப்படுமா?

மற்ற நாடுகளிலும் இந்த தடை விதிக்கப்படுமா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு ஜெர்மனிக்கு மட்டும் பொருந்தாது. கோட்பாட்டளவில், ஜெர்மனி முன்னோடியாக இருப்பதால் மற்ற நாடுகள் நோக்கியாவை ஆதரிக்கலாம். Oppo மற்றும் OnePlus ஐரோப்பா முழுவதும் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நிறுவனங்கள் ஆழ்ந்த சிக்கலைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்தியாவில் இந்த இரண்டு பிராண்ட்களுக்கும் ஏகபோக மவுசு இருப்பதனால், என்ன நடக்கும் என்பது மர்மமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus and Oppo Phone Sales Banned In Germany By Nokia Halted
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X