Home
News

தூள் பறக்கும் ஆர்டர்.. OnePlus அறிமுகம் செய்த புது ஷோல்டர் பேக்.. என்ன விலை? என்ன சிறப்பு?

ஒன்பிளஸ் (OnePlus) பிராண்ட் இப்போது ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக்பேக் (OnePlus Adventure Backpack) என்ற மிகவும் உறுதியான மற்றும் கரடுமுரடான பயன்பாட்டை தாங்கும் ரக்டு பேக்பேக் (Backpack) பையை அறிமுகம் செய்துள்ளது. இது வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் ஏராள அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை நேற்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் OnePlus நிறுவனம் தனது சமீபத்திய ட்ராவல் தயாரிப்பான ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக்பேக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்பேக் இயற்கையால் ஈர்க்கப்பட்ட முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

தூள் பறக்கும் ஆர்டர்.. OnePlus அறிமுகம் செய்த புது ஷோல்டர் பேக்..

இந்த பேக்பேக் கிளாசிக் ஒன்பிளஸ் லோகோவுடன் வெளிவந்துள்ளது. சரி, இந்த புதிய பேக்பேக்கில் ஒன்பிளஸ் என்னென்ன சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது என்று பார்க்கலாம். இந்த பேக்பேக் 900T பாலியஸ்டர் துணியால் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உறுதியானது. இந்த பேக்பேக் சுருக்கங்கள் மற்றும் சேதத்தை எதிர்க்கும் தன்மையுடன் வருகிறது.

ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக்பேக் (OnePlus Adventure Backpack):

இது மழை நாட்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் (OnePlus Adventure Backpack) 13 கம்பார்ட்மெண்ட் பிரிவுகளுடன் வருகிறது. இதில் முன்பக்க கம்பார்ட்மெண்ட்கள் நீர்ப்புகா சிப்பர்கள் உடன் வருகின்றன. இதனால், உங்கள் பேக்கிற்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் ஈரப்பதம் ஏற்படாது.

தூள் பறக்கும் ஆர்டர்.. OnePlus அறிமுகம் செய்த புது ஷோல்டர் பேக்..

இந்த ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் (OnePlus Adventure Backpack) பையானது, முதுபக்கம் ரிஜ்டு முகடுகளுள்ள திணிப்புடன் வசதியை முதன்மைப்படுத்துகிறது. உடல் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக மெஷ் துணியால் மூடப்பட்டிருக்கிறது. இது வளைந்த ஸ்ட்ராப்கள் உடன் நீண்ட நேர பயன்பாட்டிலும் அசவுகரியம் இல்லாமல், பையின் எடையை சமமாக விநியோகிக்கின்றன. இதில் 16″ லேப்டாப் வைக்கும் தனி கம்பார்ட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் விவரக்குறிப்பு (OnePlus Adventure Backpack Specs):

இந்த ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் (OnePlus Adventure Backpack) 20L ஸ்டோரேஜ் (20L Storage) உடன் வருகிறது. இதில் கிளாத் பின் ஸ்ட்ரிப் (cloth pin strip), எலாஸ்டிக் பேண்ட் ஷோல்டர் ஸ்ட்ராப், மற்றும் தண்ணீர் பாட்டில் மற்றும் குடைகள் வைக்க ஏற்ற விரிவாக்கக்கூடிய பாக்கெட்டுகள் போன்றவற்றை இந்த பேக் கொண்டுள்ளது. இது பிரெஷ் ஸ்னோ (Fresh Snow) மற்றும் வைல்டு பிளேட் (Wild Plate) என்ற 2 நிறங்களில் வருகிறது.

தூள் பறக்கும் ஆர்டர்.. OnePlus அறிமுகம் செய்த புது ஷோல்டர் பேக்..

ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் விலை (OnePlus Adventure Backpack Price):

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் (OnePlus Adventure Backpack) ரூ.4,999 என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவொரு புதிய தயாரிப்பு என்பதனால், ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது இதை ரூ.4,799 என்ற அறிமுக கால சிறப்பு சலுகை விலையில் oneplus.in வழியாக வழங்கி வருகிறது. இது குறிப்பிட்ட குறுகிய கால சலுகையாக குறைந்த நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டு வண்ணங்களில் இது கிடைக்குமென்றாலும், இந்த ஒன்பிளஸ் அட்வென்ச்சர் பேக் (OnePlus Adventure Bag) இன் ஃப்ரெஷ் ஸ்னோ ஒரு தனித்துவமான சீரற்ற வடிவத்துடன் வருகிறது. இது பனி மூடிய காடுகளை போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று ஒன்ப்ளஸ் கூறியுள்ளது. அதே சமயம் வைல்ட் ஸ்லேட் ஒரு நுட்பமான சாம்பல் நிற ஸ்லேட் நிறத்தை எளிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்திற்கு வழங்கியுள்ளது என்று ஒன்பிளஸ் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Adventure Backpack Frost Snow and Wild Slate Launched In India Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X