ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்

|

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பானது 120 ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது இன்று (மே 17) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் சாதனமானது ஒன்பிளஸ் ஏஸ் தொடரின் சமீபத்திய நுழைவாகும். கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் ஒன்பிளஸ் ஏஸ் சாதனம் இந்தியாவில் சமீபத்தில் ஒன்பிளஸ் 10 ஆர் ஆக அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி உடன் வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 12ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. கூடுதலாக ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு விலை விவரங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு விலை விவரங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.23,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.25,300 ஆக இருக்கிறது. உயர்தர வேரியண்ட் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,800 ஆக இருக்கிறது. மே 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் எனவும் ரூ.2300 வரையிலான கால தள்ளுபடியோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனங்கள் அத்லெட்டிக்ஸ் க்ரே மற்றும் லைட்ஸ்பீட் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அறிமுகம்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அறிமுகம்

உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஒன்பிளஸ் ஏஸ் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,800 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.31,100 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.40,300 ஆகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

64 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பு

64 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பு

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு சாதனமானது இரட்டை சிம் நானோ கலர் ஓஎஸ் 12.1 உடனான ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.59 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் எல்சிடி காட்சியுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனம் 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி வசதி மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் உடன் 64 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்

67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு சாதனத்தில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, யூஎஸ்பி டைப்சி உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனானது 205 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus Ace Racing Edition Smartphone Launched With 12GB RAM, 64MP Triple Rear Camera: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X