Home
News

OnePlus Ace அறிமுகம் உறுதியானது.. இந்த ஆண்டில் மட்டும் 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் OnePlus..

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் (OnePlus Ace) ஸ்மார்ட்போனின் வெளியீட்டைப் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. OnePlus Ace இன் வருகையை உறுதிப்படுத்த நிறுவனம் அதன் Weibo கணக்கை எடுத்துக் கொண்டது. இந்த சாதனம் சரியாக ஒரு வாரத்தில், அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறிது காலமாகச் செய்திகள் மற்றும் வதந்திகளில் உள்ளது. மேலும், சமீபத்தில் Geekbench தரவுத்தளத்தில் மீடியா டெக் செயலியுடன் காணப்பட்டது.

மூன்றாம் காலாண்டிற்குள் 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறதா ஒன்பிளஸ்

மூன்றாம் காலாண்டிற்குள் 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறதா ஒன்பிளஸ்

அறியப்பட்ட டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார், 2022 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கான காலக்கெடு குறித்த யோசனையைப் பகிர்ந்துள்ளார். ஒன்பிளஸ் ஏற்கனவே சில சாதனங்களை 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிப்ஸ்டரின் பட்டியல் படி மார்ச் மற்றும் மூன்றாம் காலாண்டிற்கு இடையில் குறைந்தது ஆறு ஸ்மார்ட்போன்கள் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரிவில் Nord மாடல்களின் வாரிசு சாதனங்களைப் பட்டியலில் குறிப்பிடாததால், பிராண்ட் அதிக மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் OnePlus Ace பற்றி நமக்கு என்ன தெரியும்?

வரவிருக்கும் OnePlus Ace பற்றி நமக்கு என்ன தெரியும்?

அதன்படி, இப்போது, OnePlus நிறுவனமானது OnePlus Ace இன் வருகையை உறுதி செய்துள்ளது. மேலும், பல புதிய படங்களையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இது சாதனம் பற்றிய சிறந்த யோசனையை சமீபத்திய தகவல் நமக்கு வழங்குகிறது. மற்றொரு வதந்தி என்னவென்றால், OnePlus Ace ஆனது இந்தியாவில் வரும் OnePlus 10R போன்று மறுபெயரிடப்படும் அதே சாதனமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட் போன்களின் வடிவமைப்புகளும் உண்மையில் மிகவும் ஒத்திருப்பதே இதற்குக் காரணம். இப்போது OnePlus Ace பற்றி நமக்கு என்ன தெரியும் என்று பார்க்கலாம்.

OnePlus ஏஸ் விவரக்குறிப்புகள்

OnePlus ஏஸ் விவரக்குறிப்புகள்

OnePlus Ace ஆனது 6.7 இன்ச் FullHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வெளியிடப்படும். இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8100 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இது Mali-G610 MC6 GPU உடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மீடியாடெக் Dimensity 8100 என்பது 2.85GHz வேகத்தில் இயங்கும் நான்கு கோர்கள் மற்றும் 2GHz வேகத்தில் இயங்கும் நான்கு கோர்கள் கொண்ட ஆக்டா-கோர் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஒன்பிளஸ் ஏஸ் சாதனத்திற்குத் தேவையான சக்தியை இது தடையின்றி வழங்கும் ஆற்றல் கொண்டது.

OnePlus Ace ஸ்மார்ட் போனின் கேமரா விவரக்குறிப்புகள்

OnePlus Ace ஸ்மார்ட் போனின் கேமரா விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் பற்றிப் பேசுகையில், OnePlus Ace ஆனது 50MP Sony IMX766 முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் மற்றும் 2MP சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் சாதனத்தின் முன்புறம் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் கொண்டிருக்கும். இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் மற்றும் கசிவுகளின் அடிப்படையில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வரும். இது 4,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

OnePlus Ace அறிமுகம் எப்போது?

OnePlus Ace அறிமுகம் எப்போது?

OnePlus Ace ஆனது சீனாவில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேமரா தொகுதியின் வடிவமைப்போடு நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளபடி, கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குத் தெரிந்த தகவலின் படி இந்த புதிய சாதனம் இந்தியாவில் நிகழவுள்ள ஒன்பிளஸ் இந்திய நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord 3 விரைவில் அறிமுகமா? எப்போது தெரியுமா?

OnePlus Nord 3 விரைவில் அறிமுகமா? எப்போது தெரியுமா?

டிப்ஸ்டர் வழங்கிய பட்டியலின்படி, ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் சிஇ2 லைட் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். OnePlus Nord 2T ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 10R மற்றும் OnePlus Nord 3 முறையே மே மற்றும் ஜூலை மாதங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Nord 3 ஆனது OnePlus Nord Pro ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம்.

புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மீது ரூ. 19,250 சலுகையா?

புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மீது ரூ. 19,250 சலுகையா?

கடைசியாக, OnePlus 10 Ultra அல்லது ஒருவேளை OnePlus 10 Pro+ இந்த Q3 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 10 Pro சாதனத்தைப் பற்றிப் பார்க்கையில், இதன் விற்பனை இப்போது அமேசான்மற்றும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நேரலையில் உள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு அட்டகாசமான எக்ஸ்சேஞ் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ போனின் விலையை நீங்கள் ரூ. 19,250 வரை குறைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus Ace Officially Announced With MediaTek Dimensity 8100 Chipset To Arrive On April 21 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X