Home
News

150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவோடு ஒன்பிளஸ் ஏஸ் அறிமுகம்- நான்கு நாள் காத்திருந்தால் இந்தியாவில்: பேரு வேற!

ஒன்பிளஸ் ஏஸ் சாதனம் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் சாதனம் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் ஏஸ் சாதனம் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் ஏஸ் சாதனம் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.29,600 என இருக்கிறது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது.

மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் ஏஸ் தொடரின் கீழ் முதல் மாடல் ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வியாழக் கிழமை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது 150 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது தனிப்பயன் வடிவமைப்புடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஒன்பிளஸ் ஏஸ் தொடரின் பிற சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 12 ஆதரவு, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. அதேபோல் அடுத்த வார தொடக்கத்தில் ஒன்பிளஸ் 10ஆர் ஆக இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் விலை விவரங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் விலை விவரங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.29,600 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.31,900 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.35,400 ஆக இருக்கிறது. இந்த சாதனத்தின் டாப் எண்ட் மாடல் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.41,400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ஏப்ரல் 26 முதல் சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு

ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு

சீனாவைத் தவிர பிற சந்தைகளில் ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் 10ஆர் என்ற பெயரில் இந்த சாதனம் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கணிக்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் ஏஸ் சாதனமானது இரட்டை நானோ சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இல் கலர் ஓஎஸ் 12.1 ஆதரவோடு வருகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே ஆனது 950 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது 2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா

ஹூட்டின் கீழ், ஒனபிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் உடனான மீடியா டெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா உடன் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவோடு இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 8 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் ஆதரவு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி சாம்சங் ஐசோசெல் கேமரா செல்பி வசதிக்கு என பொருத்தப்பட்டிருக்கிறது.

150 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

150 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனானது 512 ஜிபி உள்சேமிப்பு வசதி உடன் வருகிறது. இணைப்பு ஆதரவுகளுக்கு என இந்த சாதனத்தில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தில் 150 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus Ace Launched With 150W Fast Charging Support: india Launching, Price, Specs Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X