அப்போ அதுதான் இதுவா வருதா?- இந்தியாவுக்கு வரும் புதிய ஒன்பிளஸ் சாதனம்!

|

ஒன்பிளஸ் 10ஆர் லைட் சாதனமானது PGZ110 என்ற மாதிரி எண்ணுடன் இந்திய IMEI தரவுத்தளத்தில் தோன்றி இருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பானது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விலை மதிப்புப்படி சுமார் ரூ.23,300 என இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு சாதனமானது ஒன்பிளஸ் 10ஆர் லைட் என்ற பெயரில் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்புடன் தொடர்புடைய அதே மாதிரி எண்ணுடன் இந்திய ஐஎம்இஐ தரவுத்தளத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஒன்பிளஸ் நோர்ட் மாடலை போன்றே இடைப்பட்ட விலையில் இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10ஆர் லைட் மாடல்

ஒன்பிளஸ் 10ஆர் லைட் மாடல்

ஒன்பிளஸ் 10ஆர் லைட் மாடல் எண் PGZ110 உடன் செயல்பாட்டில் இருக்கிறது என பரிந்துரைக்க டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இரண்டு ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்திருக்கிறார். அதேமாதிரி இந்த எண் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் உடன் தொடர்புடையதாக இருக்கிறது. இது ஏப்ரல் மாதம் சீனாவின் டீனா தளத்தில் தோன்றியது. ஷர்மா பகிர்ந்துள்ள ஸ்க்ரீன் ஷாட்கள் ஆனது இந்திய IMEI தரவுத்தளத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சாதனம் குறித்த முழு தகவல் இல்லை என்றாலும் புதிய போன் நாட்டில் அறிமுகமாகும் என்பது தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒன்பிளஸ் இந்தியா தளத்தில் இந்த போன் சுருக்கம் தோன்றியது. இதன்மூலம் நாட்டில் ஒரு போன் அறிமுகப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரக்கூடிய ஏஸ் ரேசிங் பதிப்பு சாதனமானது ஒன்பிளஸ் 10ஆர் லைட்டாக வரும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10ஆர் சாதனமானது இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மறுபெயரிடப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் மாடலாக வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10ஆர் லைட் எதிர்பார்க்கப்படும் விலை

ஒன்பிளஸ் 10ஆர் லைட் சாதனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.23,300 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்பு ரூ.25,600 ஆகவும் இதன் டாப் எண்ட் மாடல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.29,100 ஆகவும் இருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் லைட் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் லைட் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் லைட் சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒன்பிளஸ் சாதனமானது 6.59 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி உடனான 12 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. ஒன்பிளஸ் 10ஆர் லைட் ஆனது 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் உடனான 64 எம்பி முதன்மை கேமரா உடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10ஆர் லைட் சாதனத்தின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace device will be launched in India as the OnePlus 10R: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X