டிசைன் அள்ளுதே.. பட்ஜெட் விலை.. அசுர சக்தி.. அடுத்த OnePlus போன் ரெடி.. என்ன மாடல் தெரியுமா?
ஒன்பிளஸ் (OnePlus) பற்றிய புதிய லீக் தகவல் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) என்று அழைக்கப்படும் புதிய சாதனம் தொடர்பான ஸ்கீமெடிக் டிசைன் (Design Schematics) புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
OnePlus: ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் சைலெண்டாக ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கும் வேலையில் இருப்பதாக வதந்திகள் வெளியாகின. இந்த வதந்திகள் இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) என்ற புதிய ஸ்மார்ட்போன் பெயரை குறிப்பிட்டு, ஒரு புதிய சாதனத்தை அடையாளம் காண்பித்துள்ளன. இது ஒன்பிளஸ் பிராண்டின் சொந்த சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V): இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போன் சாதனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 5 (OnePlus Nord 5) என்ற பெயருடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவொன்றும் புதிதான விஷயமில்லை. இதற்கு முன்பும் ஒன்பிளஸ் நிறுவனம் இத்தகைய வழக்கத்தை கடைபிடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் 5 (OnePlus Nord 5): சமீபத்தில் வெய்போ வழியாக வெளியான லீக் தங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) அல்லது ஒன்பிளஸ் நார்ட் 5 (OnePlus Nord 5) என்று அடையாளம் காண்பிக்கும் ஸ்மார்ட்போன் சாதனத்தின் டிசைன் ஸ்கீமெட்டிக் புகைப்படங்களை காண்பித்துள்ளது. இந்த புகைப்பட தகவலின் படி, வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று கேமராவை பெரும் என்று தெரிகிறது.
ஹெசல்பிளாட் (Hasselblad): இது முந்தைய டிஸைனுடன் ஒப்பிடும் பொழுது, புது பொலிவை சுவாரசியமான நுணுக்கத்துடன் வழங்கியுள்ளது போல் தெரிகிறது. இந்த போனில் வழங்கப்பட்டுள்ள 3 கேமராக்களும், வெர்ட்டிக்கல் கேமரா மாட்யூல் அம்சத்தை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. உற்று நோக்குகையில் 2 கேமராவிற்கும் நடுவே பெரிஸ்கோப்பிக் லென்ஸ் உடன் ஹெசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங் முத்திரையை போன் டிசைன் காண்பிக்கிறது.

வெர்ட்டிக்கல் கேமரா டிசைன்: போனின் ரியர் பேனலில் உள்ள வலதுபுறம் கேமராக்கள் வெர்ட்டிக்கல் லைனில் வைக்கப்பட்டுள்ளது. இதில் LED பிளாஷ் லைட் பில் ஷேப் வடிவத்துடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் போனின் வால்யூம் ராக்கர் கீஸ் மற்றும் பவர் பட்டன் போனின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மையப்பகுதியில் ஒன்பிளஸ் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்திற்கு வரும் போது, இது தட்டையான டிசைனை கொண்டுள்ளது.
அடுத்த பட்ஜெட் செக்மென்ட் போன்: டிஸ்பிளேவின் மையப்பகுதியில், செல்பி கேமராவிற்கான பன்ச் ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக ஒன்பிளஸ் ரசிகர்கள் கருதுகிறார்கள். பட்ஜெட் செக்மென்ட்டில் அதிக மக்களை கவர்ந்த ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் வரிசையில் அடுத்தபடியாக அறிமுகம் செய்யவிருக்கும் சாதனமாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) அல்லது ஒன்பிளஸ் நார்ட் 5 (OnePlus Nord 5) இருப்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறப்பம்சங்கள்: இந்த போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இது ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போன் சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








