என்ன சொல்றீங்க இது இரண்டுமே ஒரே போனா? OnePlus 12R தான் OnePlus Ace 3-ஆ?
ஒன்பிளஸ் (OnePlus) அடுத்தபடியாக, விரைவில் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) மாடலுடன் ஒத்ததாக தெரிகிறது.
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு நீண்டுக் கொண்டே போகிறது. விரிவடைந்து வரும் ஸ்மார்ட்போன்களின் வரிசையானது அறிக்கைகளின்படி புதிய சேர்த்தல்களைப் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய லீக் தகவல் அதைக் கூறுவது மட்டுமல்லாமல், ஒன்பிளஸ் சாதனத்திலும் அதே மறுபெயரிடுதல் உத்தியைப் பின்பற்றலாம் என்றும் கூறுகிறது. கொஞ்ச நாளாக இந்த சாயலை ஒன்பிளஸ் நிறுவனம் பின்பற்றி வருகிறது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், ஒன்பிளஸ் இன் OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் மாடல மறுபெயரிடப்பட்ட ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடல் ஆக இருக்கலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆகியவை ஒரே விவரக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. டிப்ஸ்டர் டிசிஎஸ் தகவல் படி, இந்த வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 3 வளைந்த விளிம்புகள், பஞ்ச்-ஹோல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதம், 1.5K தெளிவுத்திறன் மற்றும் PWM மங்கலான ஆதரவுடன் 6.74' இன்ச் OLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.
கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது 50MP சோனி (Sony) IMX890 சென்சார், 8MP அல்ட்ராவைடு OV8D10 லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 32MP சோனி IMX709 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முன் கேமரா 16MP செல்ஃபி ஷூட்டராக இருக்கலாம். இது 16GB அல்லது 24GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வெளிவரலாம்.
இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் இயங்குகிறது. இது 100W சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை பேக் செய்கிறது. தெரியாதவர்களுக்கு, இதற்கு முன்பு OnePlus Ace சாதனம் OnePlus 10R என மறுபெயரிடப்பட்டது. அதேபோல், OnePlus Ace 2V ஆனது OnePlus Nord 3 5G என மறுபெயரிடப்பட்டது. OnePlus Ace 2 சாதனம் OnePlus 11R என மறுபெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதே உத்தியை நிறுவனம் பின்பற்றி OnePlus Ace 3 சாதனத்தை OnePlus 12R என்ற மாடலாக அறிமுகம் செய்யலாம் என்று தகவல் லீக் ஆகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், Ace 3 இல் இன்-டிஸ்ப்ளே கைரேகை ரீடர், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS, 5G, Wi-Fi, புளூடூத் 5.2, USB-C மற்றும் NFC ஆதரவு ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த 2 சாதனங்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்ளும் என்பது இதன் பொருள். OnePlus 12R இன் ரெண்டர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு இணையத்தில் லீக் செய்யப்பட்டன. OnePlus 11 ஐப் போன்ற கேமரா வரிசையைக் கொண்ட சாதனத்தைப் பற்றிய எங்கள் முதல் பார்வையை எங்களுக்குத் தருகிறது. இது முன்பக்கத்தில் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் மற்றும் அலெர்ட் ஸ்லைடரை மற்றும் பவர் பட்டன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








