சுண்டிவிட்டா ரத்தம் வரும்.. அப்படி ஒரு கலரு.! OnePlus சைலெண்டாக களமிறக்கிய புது ரெட் போன்!
OnePlus 11R 5G ஸ்மார்ட்போன் இப்போது யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சொந்த நாட்டில் ரெட் நிறத்தில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை என்னவென்று பார்க்கலாமா?
OnePlus அதன் OnePlus Ace 2 ஸ்மார்ட்போனுக்கான புதிய வண்ண மாறுபாட்டை வெளியிட்டுள்ளது. ஆம், இது சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போதுள்ள சில்வர் மற்றும் பிளாக் ஆப்ஷன்களுடன் இந்த புதிய ரெட் வீகன் லெதர் வேரியண்ட் விருப்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வண்ண விருப்பம் தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் சாதனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் OnePlus 11R 5G என்ற பெயரில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் ஏஸ் 2 ரெட் வெகன் லெதரில் ஆப்ஷன் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த டிவைஸ் பிரகாசமான ரெட் வீகன் லெதர் மூடப்பட்டிருக்கிறது. அதேபோல் சைடில் தையல் வடிவங்களைக் கொண்டுள்ளது.
இந்த புதிய ரெட் வேரியண்ட் சாதனம் ஒரு ஸ்பெஷல் மற்றும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கிபிட் பாக்ஸுடன் வருகிறது. இது பிரபலமான கேம் "ஜென்ஷின் இம்பாக்ட்" இலிருந்து Xiangling மற்றும் அவரது துணையான Guoba ஆகிய கேரக்டர்களை ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கலர் மற்றும் லெதர் டிசைன் தவிர OnePlus Ace 2 விவரக்குறிப்புகளில் எந்த வித்தியாசமும் இல்லை. அதாவது, OnePlus 11R 5G இந்தியாவில் கிடைக்கிறதே அதே அம்சத்துடன் வருகிறது.
இந்த புதிய ரெட் வீகன் லெதர் வேரியண்ட் மாடல் இங்கேயும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 11R 5G (OnePlus Ace 2) இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக ரூ.39,999 விலையில் தொடங்குகிறது.

இதன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.44,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதேபோல், இந்த மாடல்களில் இனி ரெட் வீகன் லெதர் வேரியண்ட் மாடலும் விரைவில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.74' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. OnePlus 11R 5G ஆனது 50MP, 8MP மற்றும் 2MP சென்சார்கள் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications