Just In
- 15 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 19 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 19 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 21 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!
OnePlus இந்தியா, இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்காக ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்ஸ் (OnePlus Community Sales) விற்பனையைத் தொடங்கியுள்ளது. OnePlus நிறுவனம் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி, 2022 வரை இந்த விற்பனையை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் OnePlus நிறுவனம் வெற்றிகரமாக அதன் இருப்பை 9 ஆண்டுகள் நிலைநாட்டியுள்ள கொண்டாட்ட விற்பனையாக (OnePlus 9th Anniversary Bonanza) இந்த விற்பனை நடத்தப்படுகிறது.

OnePlus இன் இந்த கொண்டாட்ட விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!
இந்த கொண்டாட விற்பனையில் (OnePlus 9th Anniversary Bonanza Sale), OnePlus நிறுவனத்தை அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான மற்றும் பிரபலமான ஒன்பிளஸ் தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகையையும், தள்ளுபடியையும் (OnePlus Offers and Discounts) நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது.
புதிய வரவுகளான OnePlus 10 Pro, OnePlus 10T 5G, OnePlus TV Y1S Pro ஸ்மார்ட் டிவி (OnePlus smart tv) போன்ற சாதனங்கள் மீது இப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ன.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு பிரத்தியேக தள்ளுபடி.!
இன்னும் ஏராளமான OnePlus தயாரிப்புகள் மீது இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சலுகை ஒன்பிளஸ் கம்யூனிட்டியில் உறுப்பினராக (OnePlus Community Users) இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு OnePlus தயாரிப்பின் உரிமையாளராக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒன்பிளஸ் ஸ்டோர் பயன்பாட்டிலிருந்து (OnePlus Store Apps) ரூ.2500 தள்ளுபடி கூப்பனை பெற முடியும்.

OnePlus வழங்கும் ரூபாய் 2500 தள்ளுபடி வவுச்சர்.!
OnePlus ரூ.2500 தள்ளுபடி வவுச்சர் பல தயாரிப்புகளுக்குப் பொருந்தும். கூப்பனைப் பெற, ரெட் கேபிள் கிளப் (Red Cable Club) ஹோம்பேஜ் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸிற்கு சென்று ரூ.2500 தள்ளுபடி பேனரைக் கண்டறியவும்.
உங்களிடம் ஏற்கனவே OnePlus தயாரிப்பு இருந்தால் மற்றும் நீங்கள் சரியான PAN கார்டுடன் இந்தியாவில் சட்டப்பூர்வமாக வசிப்பவராக இருந்தால், நீங்கள் இந்த வவுச்சரைப் பெற முடியும்.

எந்த சாதனங்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?
ஒன்பிளஸ் 10 ப்ரோவில் (OnePlus 10 Pro) ரூ.2500 தள்ளுபடி வவுச்சரை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
ஆனால் OnePlus 10T இல், இந்த வவுச்சர் மூலம் ரூ.2,000 வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.
அதேபோல், ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (OnePlus Smart TV), ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்பு (OnePlus Audio Gadgets) என்று பிற சாதனங்களும் சலுகையின் கீழ் உள்ளன.
மேலும் இந்த தள்ளுபடி வவுச்சருடன், OnePlus Buds Pro மற்றும் OnePlus Nord Buds ஆகியவற்றை வாங்கும் போது ரூ.400 மற்றும் ரூ.200 வரை தள்ளுபடி கிடைக்கும்.

OnePlus 10T, OnePlus 10 Pro மீது கிடைக்கும் மற்ற சலுகைகள்.!
OnePlus 10T மற்றும் OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் மாடல்கள் இரண்டும் இப்போது இந்த ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்ஸ் விற்பனையின் கீழ் பிரத்தியேக வங்கி சலுகைகளுடன் கிடைக்கின்றன.
OnePlus 10T 5G சாதனம் ரூ. 44,999 விலைக்குக் கிடைக்கிறது. இது ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) கிரெடிட் கார்டுடன் வாங்கும் போது ரூ. 5000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ரூ. 6000 உடனடி தள்ளுபடி பெறலாமா?
அதேபோல், ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது ரூ. 55,999 விலைக்கு கிடைக்கிறது. இதை ஐசிஐசிஐ வங்கி கார்டுடன் வாங்கும் போது ரூ. 6000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
இதற்கும் மேல், நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடி வவுச்சர்களையும் பயன்படுத்தலாம் என்பது சிறப்பானது.

பழைய போனை கொடுத்து குறைந்த செலவில் புது போனிற்கு அப்கிரேட் ஆகலாம்.!
இதன் மூலம் OnePlus 10T 5G மற்றும் OnePlus 10 Pro 5G ஆகியவற்றின் விலையை முறையே ரூ.42,999 மற்றும் ரூ.52,499 ஆகக் குறைக்கலாம்.
இது தவிர, உங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன் சாதனங்களை எக்ஸ்சேஞ் செய்யவும் நிறுவனம் இப்போது அனுமதிக்கிறது. இந்த நேரத்தில் நிறுவனம் சிறந்த எக்ஸ்சேஞ் சலுகையையும் (OnePlus Exchange Offers) வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பெஸ்டான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.!
உங்கள் பழைய போனை வழங்கி புதிய போனுடன் அப்கிரேட் செய்துகொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அருமையான எக்ஸ்சேஞ் வேல்யூ இப்போது கிடைக்கிறது.
முழு விபரங்களை அறிந்துகொள்ள ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு கிடைக்கும் இந்த பெஸ்டான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470