50எம்பி கேமரா, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு: ஜனவரி 17 முதல் இந்தியாவில் கிடைக்கும் ஒன்பிளஸ் 9ஆர்டி!

|

ஒன்பிளஸ் 9ஆர்டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 888 மற்றும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 9 ஆர்டி இந்திய விற்பனை

ஒன்பிளஸ் 9 ஆர்டி இந்திய விற்பனை

ஒன்பிளஸ் 9 ஆர்டி இறுதியாக இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 சீரிஸ்-ல் கிடைக்கும் இந்த நான்காவது ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.46,999 ஆகவும் இருக்கிறது. அமேசான்.இன் தளத்தின் ஒரு பகுதியாக அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 16 ஜனவரி 2022 முதல் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்.

ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் 9ஆர்டி 5ஜி விற்பனை

ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் 9ஆர்டி 5ஜி விற்பனை

ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், அமேசான்.இன், ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ, க்ரோமா மற்றும் அனைத்து பார்ட்னர் தளங்களிலும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் 9ஆர்டி 5ஜி சாதனம் ஓபன் விற்பனைக்கு வரும்.

ஒன்பிளஸ் 9ஆர்டி சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 9ஆர்டி சிறப்பம்சங்கள்

டிஸ்ப்ளே: 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ ஆதரவு, 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

கேமரா அம்சங்கள்: 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 ஓஐஎஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவுடனான முதன்மை கேமரா, 16 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி, ஆக்சிஜன் ஓஎஸ் 11.3 ஆண்ட்ராய்டு 11 இயக்க ஆதரவு

65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி

ஒன்பிளஸ் 9ஆர்டி வாங்கலாமா

ஒன்பிளஸ் 9ஆர்டி வாங்கலாமா

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் உலகளாவிய அறிமுகத்தின் மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது சிறந்த குவால்காம் எஸ்டி 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது வெப்பம் வெளியேற்ற என புதிதாக வடிவமைக்கப்பட்ட விசி குளிரூட்டும் அமைப்புடன் வருகிறது. இது மூன்று அடக்கு வெப்பச் சிதறல் அணுகலை கொண்டுள்ளது. இதுகுறித்து ஒன்பிளஸ் தகவலின்படி, ஒன்பிளஸ் 9 தொடருடன் ஒப்பிடும் போது இது 20% அதிக திறன் கொண்ட வெப்ப சிதறல் பொறிமுறையை கொண்டுள்ளது.

சிறந்த முறை அணுபவம்

சிறந்த முறை அணுபவம்

அதேபோல் சோனி ஐஎம்எக்ஸ்766 இமேஜ் சென்சாரை பயன்படுத்தும் 50 எம்பி டிரிபிள் லென்ஸ் கேமரா மூலம் சிறந்த காட்சி பதிவை பெறலாம். இது சிறந்த முறை அணுபவத்தை வழங்கும். ஒன்பிளஸ் நைட்ஸ்கேப் பயன்முறையானது குறைந்த ஒளி புகைப்படத்தில் சிறந்த முடிவுகளை வழங்குகிறது. வீடியோக்களை பொறுத்தவரையில், ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது ஏஐ ஹைலைட் வீடியோ பயன்முறை அனுபவத்துடன் வருகிறது. இது 4கே தர வீடியோ பதிவு ஆதரவை வழங்குகிறது.

1080 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே

1080 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது 1080 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது. இது கேம் விளையாடும் போது 600 ஹெர்ட்ஸ்ஆக அதிகரிக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன் ஓஎஸ் 11.3 மூலம் இயக்கப்படுகிறது.

120 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் ஆதரவு

120 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் ஆதரவு

ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி23 ப்ரோ மற்றும் பரவலாக எதிர்பார்க்கப்படும் சியோமி எம்ஐ 11டி ப்ரோ போன்றவற்றுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் சமீபத்திய கண்டுபிடிப்பான 120 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. இந்த சோதனையில் சியோமி சாதனம் அதன் 4500 எம்ஏஎச் பேட்டரியை 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்தது. ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது 65 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4500 எம்ஏஎச் பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். ஒன்பிளஸ் 9ஆர்டி இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இது ஹேக்கர் பிளாக் மற்றும் நானோ சில்வர் ஆகும். இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ்.இன்ஸ, ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், அமேசான்.இன், ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ க்ரோமா மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பார்ட்னர் அவுட்லெட்களிலும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் விற்பனை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oneplus 9RT Smartphone Will Be Available on 17th January in India: 50MP Triple Camera, 65W Fast Charging Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X