இந்தியாவில் OnePlus 9RT ஸ்மார்ட்போனின் விலை இதுவாக தான் இருக்குமா? வெளியான ஹாட் தகவல்..

|

ஒன்பிளஸ் 9 ஆர்டி சீன உற்பத்தியாளரிடமிருந்து வரவிருக்கும் டி-சீரிஸ் போன் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள் ஏற்கனவே இணையத்தில் கசிந்துவிட்டதாகத் தெரிகிறது. சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவில் இந்த விவரங்களை ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். இந்த சாதனம் என்ன விலையில் என்ன அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று பார்க்கலாம்.

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை

OnePlus 9RT ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த போன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி இரண்டு வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு கொண்ட ஒரு மாடலாகவும் மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு மாடலாகவும் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட்போனின் விலை என்ன?

புதிய ஒன்பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட்போனின் விலை என்ன?

தற்போது வெளியாகியுள்ள டிப்ஸ்டர் தகவலின் படி, புதிய ஒன்பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சிஎன்ஒய் விலை படி 2,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 34,400 ஆகும். அதேபோல், இதன் 256 ஜிபி மாடலுக்கு சிஎன்ஒய் 3,299 ஆக இருக்கிறது, இது தோராயமாக ரூ. 37,900 விலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் 8GB + 128GB மாடலுக்கு ரூ. 39,999 மற்றும் 12GB + 256GB மாடலுக்கு ரூ. 43,999 விலை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இனி பக்கத்து வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை: வைஃபை-ல் வந்த மிகப்பெரிய மாற்றம்: அதிவேக இணையத்தில் வைஃபை 6இ!இனி பக்கத்து வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை: வைஃபை-ல் வந்த மிகப்பெரிய மாற்றம்: அதிவேக இணையத்தில் வைஃபை 6இ!

OnePlus 9RT இன் கூறப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்

OnePlus 9RT இன் கூறப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்

Weibo இல் அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆர்சனல் மூலம் பகிரப்பட்டது. ஒரு சமீபத்திய அறிக்கை OnePlus 9RT அக்டோபர் மாதம் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, வதந்தியான ஒன்பிளஸ் 9RT ஆனது 6.55 இன்ச் சாம்சங் E3 ஃபுல் எச்டி பிளஸ் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இடம்பெறும்.

50 மெகாபிக்சல் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு

50 மெகாபிக்சல் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் 8GB LPDDR4x ரேம் மற்றும் 256 GB வரை UFS 3.1 சேமிப்பகத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. OnePlus 9RT ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டு செல்லலாம், இது சமீபத்திய ஒன்பிளஸ் நோர்ட் 2 வில் இருக்கும் அதே 16 மெகாபிக்சல் சோனி IMX481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோகிறோம் சென்சார் உடன் வருகிறது.

2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

4,500mAh பேட்டரி

4,500mAh பேட்டரி

முன்பக்கத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் இந்த போனில் உள்ளது. தொலைபேசி NFC ஆதரவுடன் வரலாம். இது 65W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியால் ஆதரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 ஆர்டி ஒரு ஃப்ரோஸ்ட் செய்யப்பட்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் கவர், அனைத்து அலுமினிய பாடி, டால்பி அட்மோஸ் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 9RT Price Tipped to Be Under Rs 35000 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X