ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!

|

ஒன்பிளஸ் 9 சாதனம் புதிய அப்டேட்டை பெறுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் புதிய ஏப்ரல் பாதுகாப்பு பேட்சை பெறுகிறது. புதுப்பிப்பில் பல மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்பிளஸ் 9 தொடர்

ஒன்பிளஸ் 9 தொடர்

2021 முதல் ஒன்பிளஸ் 9 தொடர் புதிய புதுப்பிப்பை பெறுகிறது. இது மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான பாதுகாப்பு பேட்சை அதிகரிக்கிறது. புதிய இணைப்பு மற்றும் கேமிங் அம்சங்களுடன் பல மேம்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு சில பயனர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய அப்டேட் பதிப்பு

ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய அப்டேட் பதிப்பு

ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய அப்டேட் பதிப்பு சி.60 உடன் வருகிறது. இந்த புதுப்பிப்பான 1.5 ஜிபி-க்கும் அதிகமான அளவைக் கொண்டிருக்கிறது. இது சேஞ்ச் லாக் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. நீங்கள் இதை அப்டேட் செய்வதன் மூலம் ஸ்பிளிட் ஸ்கிரீன் பயன்முறையில் ஒரே நேரத்தில் மிதக்கும் சாளரங்களில் 3 பயன்பாடுகள் வரை ஓபன் செய்யலாம். தேவைக்கேற்ப ஸ்பிளிட் ஸ்கிரீன் முறையில் இதை மாற்றலாம். அதேபோல் விரைவு திரும்பலுக்கு கடிகார பயன்பாட்டை பயன்படுத்தலாம். தற்போது உங்கள் கணினியில் 3 விண்டோஸ் வரை ஓபன் செய்யலாம்.

பன்முக கிராஃபிக்ஸ் அம்சம்

பன்முக கிராஃபிக்ஸ் அம்சம்

ஹைப்பர் பூஸ்ட் எண்ட் டூ எண்ட் பிரேம் ரேட் ஸ்டெபிலைசர் உடன் வருகிறது. கேமிங் அழுத்தத்தை கையாள பன்முக கிராஃபிக்ஸ் அம்சம் இதில் இருக்கிறது. குறிப்பிட்ட கேம்களுக்கு மட்டுமே இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது குறிப்பிட்ட முறையில் மட்டுமே பயனர்களுக்கு கிடைத்தாலும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் சாதனத்துக்கு புதுப்பிப்பு இருக்கிறதா என்பதை சரிபார்க்க, உங்கள் சாதனத்துக்குள் சென்று செட்டிங்க்ஸ் என்ற பயன்பாட்டை திறந்த சிஸ்டம் ஓபன் செய்து அதனுள் சிஸ்டம் புதுப்பிப்புகளை தேர்ந்தெடுத்து பார்த்துக் கொள்ளலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு

இந்தியாவில் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பானது 120 ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. புதிய ஒன்பிளஸ் சாதனமானது ஒன்பிளஸ் ஏஸ் தொடரின் சமீபத்திய நுழைவாகும். ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி உடன் வருகிறது. அதேபோல் இந்த சாதனம் 12ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. கூடுதலாக ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.23,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.25,300 ஆக இருக்கிறது. உயர்தர வேரியண்ட் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,800 ஆக இருக்கிறது. மே 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் எனவும் ரூ.2300 வரையிலான கால தள்ளுபடியோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனங்கள் அத்லெட்டிக்ஸ் க்ரே மற்றும் லைட்ஸ்பீட் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி வசதி மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் உடன் 64 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஆனது 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு சாதனத்தில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, யூஎஸ்பி டைப்சி உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 9 Series Getting New Update With Several Security Patch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X