வாங்க சரியான நேரம்- ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அதிரடி விலைக் குறைப்பு!
ஒன்பிளஸ் 9 ப்ரோ இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் உயர்ரக மாறுபாடாக 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.64,999 மற்றும் ரூ.69,999 என்ற விலைக்கு மார்ச் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு வேரியண்டும் ரூ.5000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் விலை
ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் விலை இந்தியாவில் மேலும் குறைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஒன்பிளஸ் அதன் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்துக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் ரசிகராக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறந்த தேர்வாக இருக்கும். ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. தற்போது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ இந்தியாவின் புதிய விலை
ஒன்பிளஸ் 9 ப்ரோ இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.64,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.59,199 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.54199 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் ரூ.5000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது கூடுதலாக உடனடி ரூ.5000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆறு மாத இலவச ஸ்பாடிஃபை ப்ரீமியத்தை நிறுவனம் வழங்குகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளதுஇதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி
சமீபத்தில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் முன்னதாகவே சீனாவில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் ஆதரோவடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.


Click it and Unblock the Notifications