OnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா? தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

|

ஒன்பிளஸ் 9 ப்ரோ போனில் எதிர்பார்த்திடாத புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன் விரைவில் ஓவர் ஹீட்டிங் ஆவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒன்பிளஸ் 9 ப்ரோ அதிக வெப்பமயமாதல் சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர். தொலைபேசி பெரும்பாலும் வெப்பமடைவதாகக் கூறப்படுகிறது, குறிப்பாகப் பயனர்கள் அவர்களின் கேமராவை பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகி ஓவர் ஹீட்டிங் எச்சரிக்கை செய்தியைக் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் உருவான பெரிய சிக்கல்

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் உருவான பெரிய சிக்கல்

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் கேமரா பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது இந்த சிக்கலைச் சந்திப்பதாகப் பல பயனர்கள் புகார் செய்ய ஒன்பிளஸ் சமூக பக்கத்திற்குச் சென்றுள்ளனர். ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய போனில் இந்த சிக்கல் இருப்பதை ஒப்புக் கொண்டது. இந்த சிக்கலுக்குத் தீர்வாக எதிர்காலத்தில் ஒரு மென்பொருள் திருத்தம் வெளியிடப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஃபிளாக்ஷிப் கடந்த மாதம் இந்தியாவில் ஒன்ப்ளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

பயனர்களுக்கு ஓவர் ஹீட்டிங் எச்சரிக்கை செய்தி

பயனர்களுக்கு ஓவர் ஹீட்டிங் எச்சரிக்கை செய்தி

குறிப்பிட்டுள்ளபடி, ஒன்ப்ளஸ் 9 ப்ரோவில் அதிக வெப்பமயமாதல் சிக்கல்களைப் புகாரளிக்கப் பயனர்கள் ஒன்பிளஸ் போரம் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தைச் சூழ்ந்துள்ளனர். இந்த சிக்கல் பெரும்பாலான ஒன்பிளஸ் 9 ப்ரோ பயனர்களிடமிருந்து காணப்பட்டுள்ளது. கேமரா பயன்பாட்டின் லேசான பயன்பாட்டில் ஈடுபடும்போது கூட ஸ்மார்ட்போன் ஓவர் ஹீட்டிங் எச்சரிக்கை செய்தியைக் காட்டுகிறது என்று பயனர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளிசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி

21 டிகிரி வெப்பத்திலும் ஓவர் ஹீட்டிங் பிரச்சனை

21 டிகிரி வெப்பத்திலும் ஓவர் ஹீட்டிங் பிரச்சனை

உதாரணமாக, ஒரு ஒன்பிளஸ் 9 ப்ரோ வாங்கிய பயனர் அவரின் போனை சூரிய ஒளியில் ஒரு படத்தை எடுக்க முயன்ற போது ஓவர் ஹீட்டிங் எச்சரிக்கையைப் பெற்றுள்ளார், அதுவும் வெளியே வானிலை 21 டிகிரியில் இருக்கும் போது இந்த எச்சரிக்கை செய்தி அவருக்கு வந்துள்ளது. சில பயனர்கள் 22 டிகிரி வெப்பநிலை அறைக்குள் 4K120fps ரெக்கார்டிங் செய்யும் போது ஒன்பிளஸ் 9 ப்ரோவில் ஓவர் ஹீட்டிங் சிக்கலை சந்தித்துள்ளனர். ஒன்பிளஸ் 8 ப்ரோவைப் போலவே, ஒன்பிளஸ் 9 ப்ரோவிளும் இந்த சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய திருத்தம் கொண்ட சாப்ட்வேர் அப்டேட்

புதிய திருத்தம் கொண்ட சாப்ட்வேர் அப்டேட்

இந்த பிரச்சனையை திருத்தி அமைக்க நிறுவனம் ஒரு பிழைதிருத்தத்தை வெளியிடுவதாகக் கூறியுள்ளது. இந்த புதிய திருத்தம் சாப்ட்வேர் அப்டேட் மூலம் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அப்டேட் 'அடுத்த சில வாரங்களில்' வெளியிடப்படும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா?ஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா?

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

ஒன்பிளஸ் 9 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ, 64,999 விலையிலும், இதன் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 69,999 விலையிலும் அமேசான் மற்றும் OnePlus.in வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது மார்னிங் மிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 9 Pro Overheating Issue, Fix May Come in Few Weeks : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X