சபாஷ்., சரியான வாய்ப்பு: ரூ.13,000 தள்ளுபடி சார்- ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ சாதனத்தை உடனே சொந்தமாக்குங்கள்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு என வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. சாதாரன ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ப்ரீமியம் ரக ஒன்பிளஸ் சாதனத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள்

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள்

இந்த ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியுடன் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதற்கு இது சரியான நேரமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வந்த ஒன்பிளஸ் ஃபிளாக்ஷப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதீத தள்ளுபடியில் வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கார்டை பயன்படுத்தி வாங்கும் போது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை

இதுவரை இல்லாத குறைந்த விலை

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம் என்பதாகும். நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க திட்டமிட்டிருந்தால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான் இந்தியா அல்லது அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்திற்கு செல்லலாம். உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் இருந்தால் நீங்கள் ரூ.13000 வரை தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்துக்கு அமேசானில் சிறந்த தள்ளுபடி

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்துக்கு அமேசானில் சிறந்த தள்ளுபடி

அமேசான் தளம் மூலமாக இந்த சாதனம் வாங்கும் போது கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம். அமேசான் நிறுவனம் மூலம் சாதனம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.5000 தள்ளுபடி கூப்பன் கிடைக்கிறது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.10,000 தள்ளுபடி விலையில் பெறலாம்.

அமேசான் தள்ளுபடி கூப்பன்

அமேசான் தள்ளுபடி கூப்பன்

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கையில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் தள்ளுபடி கூப்பனாக ரூ.5000 வழங்குவதோடு, ஐசிஐசிஐ வங்கி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ரூ.8000 வரை தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.54,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.41,999 ஆக இருக்கிறது. அதேசமயத்தில் அமேசான் உயர்நிலை வேரியண்ட் சாதனம் அமேசான் தளத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக் என காட்டுகிறது.

ஒன்பிளஸ் வெப்சைட் தளத்தில் ஒன்பிளஸ் 9 சீரிஸ்-க்கு தள்ளுபடி

ஒன்பிளஸ் வெப்சைட் தளத்தில் ஒன்பிளஸ் 9 சீரிஸ்-க்கு தள்ளுபடி

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் இந்திய தளத்தில் ரூ.44,999 என இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் சாதனம் வாங்கும் போது ரூ.8000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அதன் விலை ரூ.36,999 ஆக கிடைக்கிறது. மறுபுறம் உயர்நிலை வேரியண்ட் சாதனமான இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.49,999 ஆக இருந்த நிலையில் ஐசிஐசிஐ ரூ.8000 தள்ளுபடி மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.41,999 என வாங்கலாம்.

அடிப்படை மாடல் விலை

அடிப்படை மாடல் விலை

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் விலை ரூ.59,999 ஆக இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் இந்த சாதனம் வாங்கும் போது ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.54,999 என வாங்கலாம். இதன் உயர்நிலை வேரியண்ட் ஆன 12 ஜிபி மாறுபாட்டுக்கும் இதே தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.59,999 என வாங்கலாம்.

டிசம்பர் 31 வரை மட்டுமே தள்ளுபடி

டிசம்பர் 31 வரை மட்டுமே தள்ளுபடி

இந்த சலுகையானது குறிப்பிடத்தக்க காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியானது டிசம்பர் 31 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒன்பிளஸ் 9ஆர், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ, ஒன்பிளஸ் நோர்ட் 2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் ஒன்பிளஸ் இதேபோன்ற சலுகைகளை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும், இந்த சாதனத்தை ரூ.13000 வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 20: 9 என்ற திரை
 • விகிதம்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • ரேம்: 8ஜிபி/12ஜிபி
 • மெமரி: 128ஜிபி/256ஜிபி
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
 • சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
 • ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
 • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
 • செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
 • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
 • வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
 • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
 • ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • என்எப்சி
 • எடை: 183 கிராம்
 • ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

  ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

  டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)

  சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

  ரேம்: 8ஜிபி/12ஜிபி

  மெமரி: 128ஜிபி/256ஜிபி

  ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளதுஇதன் டிஸ்பிளே

  ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்

  செல்பீ கேமரா: 16எம்பி

  இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11

  பேட்டரி: 4500 எம்ஏஎச்

  வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

  5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
  ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
  என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.

  எடை:197 கிராம்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus 9, Oneplus 9 Pro Smartphones Gets Huge Discount in India: Best time to Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X