ஒன்பிளஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி- கிடைத்தது புதிய அப்டேட்: சிக்கல் எல்லாம் சரி பண்ணியாச்சு!
ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 12ஐ மீண்டும் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் 9 தொடருக்கான சமீபத்திய புதுப்பிப்பில் தற்போது சில புகாரளிக்கப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீண்டும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஒஸ் 12-ஐ அறிவித்துள்ளன. சமீபத்திய வெளியீடு கடந்த வாரம் வெளியிடப்பட்ட முந்தைய பதிப்பில் இருந்த சிக்கல்களை தீர்ப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 தொடருக்கான கடைசி ஒன்பிளஸ் நிறுவனம் இடைநிறுத்தியது. காரணம் கடைசி புதுப்பிப்பில் பிழைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து புகார் அளித்ததையடுத்து இது இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12
கடந்த வாரம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆகியவற்றிற்கான அசல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12-ஐ வெளியிட்டது. இந்த புதுப்பிப்பில் மொபைல் டேட்டா இணைப்பு, அறிவிப்புகள் மற்றும் பிறவைகள் முடக்கம் சிக்கல்கள் உள்ளிட்ட காட்சி சிக்கல்களை ஏற்படுத்தும் பிழைகள் உட்பட பிழைகளையும் அறிமுகம் செய்தது. இதையடுத்து நிறுவனம் இறுதியாக இந்த வெளியீட்டை இடை நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது நிறுவனம் புதிய மென்பொருள் தொகுப்பை வெளியிடுகிறது. இந்த புதிய அப்டேட்டில் சிக்கல்கள் தீர்ப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் புதிய அப்டேட்
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனானது இந்திய பயனர்களுக்கு LE2111_11_C.39 என்ற மென்பொருள் பதிப்பையும் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு LE2115_11_C.39ஐயும் அறிவித்தது. அதேபோல் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் LE2121_11_C.39-ஐப் பெறுகிறது அதேபோல் LE2125_11_C.39 என உலகளாவிய சந்தைகளில் கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

புதிய ஆக்ஸிஜன் ஓஎஸ் வெளியீடு
புதிய ஆக்ஸிஜன் ஓஎஸ் வெளியீடு கைரேகை திறப்பின் மென்மையை மேம்படுத்துகிறது. அதேபோல் சில கேம்களில் ஸ்க்ராட்ச் செய்யும் போது உள்ள சிக்கல்களையும் சரி செய்வதாக ஒன்பிளஸ் தெரிவித்தது. அதேபோல் சில பயனர்களுக்கு நோட்டிப்பிகேஷன் பாக்ஸ் காலியாக இருப்பதாக தெரிவித்த புகார்களையும் இந்த புதுப்பிப்பு சரிசெய்கிறது. தேமகா மற்றும் நெட்வொர்க் இணைப்பில் இருக்கும் மேம்பாடுகளை பெறுகின்றன. அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனமானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12 அப்டேட் உடன் டிசம்பர் 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சையும் வழங்குகிறது.

புகார்கள் சரிசெய்யப்பட்டதாக அறிவிப்பு
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் சமீபத்திய புதுப்பிப்பு பெற, செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று சிஸ்டம் மற்றும் சிஸ்டம் புதுப்பிப்புகளுக்குள் செல்ல வேண்டும். ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் போன்களை போன்றே சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 மற்றும் கேலக்ஸி இசட் போல்ட் 3 ஆகியவையும் தென்கொரியாவில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான புதுப்பிப்பை பெற்றது. இதுகுறித்து கடந்த வாரம் பயனர்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதையுடம் இதுவும் இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
20: 9 என்ற திரைவிகிதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி
எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளதுஇதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரேம்:8ஜிபி/12ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 ரியர்
கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி பேட்டரி: 4500 எம்ஏஎச்
பேட்டரி 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி


Click it and Unblock the Notifications