ஒன்பிளஸ் இந்த மாடல் பயனரா நீங்கள்: இதை செய்தால் எல்லாமே அப்டேட்!

|

ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஆகிய சாதனங்கள் இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.5.5 புதுப்பிப்பை பெறுகிறது என பயனர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த அப்டேட்டானது கேமரா, நெட்வொர்க் மற்றும் சில சிஸ்டம் மேம்பாடுகளை பெறுகிறது. அதோடு இந்த புதுப்பிப்பானது மே 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சையும் பெறுகிறது. பிற பிராந்தியங்களில் இந்த புதுப்பிப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11

இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 அவுட்- ஆஃப் பாக்ஸ் மூலம் இயங்குகின்றன. ஒன்பிளஸ் முதல் ஸ்மார்ட்போன்கள் ஸ்வீடிஸ் பிராண்ட ஹாசல் போர்ட் கேமராக்களுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ புதுப்பிப்பு

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ புதுப்பிப்பு

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ புதுப்பிப்பு ஒன்பிளஸ் ஃபோரம்ஸ் பயனர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு பயனர் பகிர்ந்த ஒன்பிளஸ் ஸ்க்ரீன் ஷாட்டின்படி, ஒன்பிளஸ் 9 ப்ரோ புதுப்பிப்பு மே 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் தொகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதோ மேம்பட்ட எச்டிஆர் அவுட், பின்புற கேமராக்களின் மேம்பட்ட வைட் பேலன்ஸ் செயல்திறன் வடிவத்தில் கேமரா வருகிறது. அதோடு மட்டுமின்றி இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களில் சார்ஜிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. அதேபோல் விசைப்பலகை போன்ற பின்தங்கியிருந்த அம்சத்தை ஒன்பிளஸ் அப்டேட் சரிசெய்திருக்கிறது.

அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை

அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை

இருப்பினும் புதுப்பிப்பு தொடர்பாக ஒன்பிளஸிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. இருப்பினும் வெளியீடு மற்றும் பிற பகுதிகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் தகவல்களா வெளியாகியுள்ளது. இந்த புதுப்பிப்பு 130 எம்பி அளவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றனர். இந்த புதுப்பித்தலின் முழு உருவாக்க எண் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.5.5.LE15DA உடன் இந்திய மாடலுக்கு வருகிறது. இந்த தகவல் GSMArena என்ற தளத்தால் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது.

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் அப்டேட்

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் அப்டேட்

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்களை அப்டேட் செய்யும்போது வலுவான வைஃபை இணைப்புடன் சார்ஜ் இணைப்பில் வைத்திருப்பது நல்லது. இதை அப்டெட் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில் இது செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று சிஸ்டம் மற்றும் சிஸ்டம் அப்டேட்டுக்குள் செல்ல வேண்டும் பின் டவுன்லோட் இன்ஸ்டார் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

20: 9 என்ற திரைவிகிதம்

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

ரேம்: 8ஜிபி/12ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11

சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்

செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா

பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி

வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,

ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

என்எப்சி

எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)

சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

ரேம்: 8ஜிபி/12ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே

ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்

செல்பீ கேமரா: 16எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11

பேட்டரி: 4500 எம்ஏஎச்

வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,

ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,

என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.

எடை:197 கிராம்

Best Mobiles in India

English summary
Oneplus 9, Oneplus 9 Pro Gets OxygenOS 11.2.5.5 Update in India With Lot of Updates: Sources Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X