OnePlus 9 இல் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கு.. கூடவே 'இந்த' ஸ்பெஷல் அம்சமும் இருக்கா? பலே..பலே..

|

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்தில் லீக் ஆகி வருகிறது. சமீபத்தில் சாதனத்தின் முன்பக்க லைவ் போட்டோ இணையத்தில் லீக் ஆனது, அதனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் கேமரா விபரங்கள் இணையத்தில் லீக் ஆனது, அந்த வரிசையில் இப்பொழுது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் மற்றொரு ஸ்பெஷல் அம்சம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9 பஞ்ச்-ஹோல் நாட்ச் டிசைன் கொண்ட தட்டையான ஃபிளாட் டிஸ்பிளே அமைப்புடன் வருகிறது என்ற தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இப்போது, இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இடம்பெற்றுள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும், வயர்லெஸ் சார்ஜிங் என்பது போனுடன் வயர் கனெக்ட்டிவிட்டி இல்லாமல் சாதனத்தை வயர்லெஸ் சார்ஜிங் போர்ட் மூலம் சார்ஜ் செய்யும் முறையாகும். அதேபோல், ரிவர்ஸ் சார்ஜிங் என்பது ஒன்ப்ளஸ் 9 இன் பின்புறத்தில் மற்ற வயர்லெஸ் சாதனங்களை வைத்து நீங்கள் சார்ஜிங் செய்துகொள்ளலாம். அதாவது உங்கள் போனே ஒரு வயர்லெஸ் சார்ஜிங் போர்ட்டாக செயல்படக்கூடும்.

போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!

எக்ஸ்ட்ரா சைஸ் பேட்டரி

எக்ஸ்ட்ரா சைஸ் பேட்டரி

சமீபத்திய தகவலின்படி, இந்த சாதனம் ஒன்ப்ளஸ் 8 ப்ரோவைப் போலவே 30W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும். இரண்டாவதாக, 8 ப்ரோவில் 4300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே, அதேபோல் ஒன்பிளஸ் 9 இல் 4500 எம்ஏஎச் பேட்டரியை நாம் எதிர்பார்க்கலாம். ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 65W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வரும் என்று இணைய தகவல் தெரிவிக்கிறது.

மேம்பட்ட கேமரா

மேம்பட்ட கேமரா

கிட்டத்தட்ட அனைத்து பிரீமியம் அம்சங்களும் ஒன்பிளஸ் 9 இல் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இப்படி இருக்கையில் ஒன்ப்ளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் மத்தியில் என்ன வேறுபாடு இருக்கும் என்பது புதிராக இருக்கிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் நிச்சயமாக இன்னும் கூடுதலான சக்தி வாய்ந்த சிறந்த பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமராவை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 9 might support wireless charging and reverse wireless charging with extended battery life : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X