ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.!
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக வெளியான அம்சங்கள் அடிப்படையில் இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியை கொண்டிருக்கும் என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.9-இன்ச் Quad HD+ டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி/12ஜிபி ரேம்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
வழங்கப்படும்.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4500 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும்ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications