ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்- உங்களுக்கு ஒரு நற்செய்தி., கிடைத்தது ஆண்ட்ராய்டு அப்டேட்!

|

ஒன்பிளஸ் 9 தொடருக்கான சாஃப்ட்வேர் புதுப்பிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு ஒன்பிளஸ் 9 தொடர் புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ இந்திய பயனர்களுக்கு ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.8.8 புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 தொடர் அப்டேட்

ஒன்பிளஸ் 9 தொடர் அப்டேட்

இந்த புதுப்பிப்பானது ஒன்பிளஸ் 9 தொடரில் அறியப்பட்ட சில சிக்கல்களை சரிசெய்கிறது. ஒன்பிளஸ் கடந்தமாதம் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோவுக்கான ஆக்ஸிஜன் ஓஎஸ்11.2.6.6 மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டது. தர்போது ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த மென்பொருள் அப்டேட்டை அறிவித்துள்ளது.

புதிய மென்பொருள் புதுப்பிப்பு

புதிய மென்பொருள் புதுப்பிப்பு

இந்த சாதனங்களுக்கு புதிய மென்பொருள் புதுப்பிப்பு ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.8.8 வடிவத்தில் வருகிறது. தற்போது கிடைக்கக்கூடிய புதுப்பிப்பு ஆனது சாதனங்களுக்கு பாதுகாப்பு இணைப்பையும் வழங்குகிறது. இந்தியா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா பயனர்களுக்கு இந்த புதுப்பிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புதுப்பிப்பானது புதிய புதுப்பிப்பு இந்தியாவில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.8.8.LE15DA ஆக வந்துள்ளது. அதேபோல் உலகளாவிய அளவில் பார்க்கையில் இது ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.8.8.LE15BA மற்றும் 11.2.8.8.LE15AA உடன் வருகிறது.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.8.8 புதுப்பிப்பு அமைப்பு

ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.8.8 புதுப்பிப்பு அமைப்பு

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு 2021.07-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அறியப்பட்ட சிக்கல்கள் கண்டறிந்து மேம்பட்டு புதுப்பிப்பு நிலைத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட பிட்மோஜி ஏஓடி, ஸ்னாப்சேட் மற்றும் பிட்மோஜி இணைந்து இதை வடிவமைத்துள்ளது. ஒன்பிளஸ் 9 இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.8.8.LE25DA, ஐரோப்பாவில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.8.8.LE25BA, அமெரிக்காவில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.8.8.LE25AA என புதுப்பிப்பை பெறுகிறது.

ஒன்பிளஸ் ஸ்டோர்

ஒன்பிளஸ் ஸ்டோர்

ஒன்பிளஸ் கணக்கை நிர்வகிக்கவும் எளிதில் அணுகி ஆதரவை பெறவும், நிறுவனம் வழங்கும் நன்மைகளை கண்டறியவும், ஒன்பிளஸ் தயாரிப்புகளை அணுகவும் ஒன்பிளஸ் ஸ்டோருக்கு செல்லலாம். ஒன்பிளஸ் 9 தொடர் இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.7.7 புதுப்பிப்பை பெற்றுள்ளது. அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமரா மற்றும் பேட்டரி மேம்பாடுகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறப்பம்சம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறப்பம்சம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறப்பம்சம் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 6.7 இன்ச் கர்வுடு QHD பிளஸ் கொண்ட 3216 × 1440 பிக்சல்கள் உடைய எல்.டி.பிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் வீதம், எச்டிஆர் 10 பிளஸ் சான்றிதழ், எம்இஎம்சி ஆதரவு, 10 பிட் வண்ண ஆழம் 1300 நிட் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. முன்பக்கத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் ஸ்டோரேஜ்

கேமரா மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போன் 8GB / 12GB LPDDR5 RAM மற்றும் 128GB / 256GB UFS 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 உடன் இயங்கும் அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டது. கேமராவைப் பொறுத்தவரையில், இது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட டெலிபோட்டோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. செல்ஃபிகளுக்காக 16 மெகா பிக்சல் ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

20: 9 என்ற திரைவிகிதம்

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

ரேம்: 8ஜிபி/12ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11

சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்

செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா

பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி

வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,

ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி

எடை: 183 கிராம்

Best Mobiles in India

English summary
Oneplus 9 and Oneplus 9 Pro Gets Oxygen OS 11.2.8.8 Update in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X