ரூ.13,000 தள்ளுபடி: இப்போ ரொம்ப கம்மி விலை- ஒன்பிளஸ் 9 5ஜி வாங்க சரியான நேரம்!
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ்-ன் பிரபலமான முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் என்பது ஒன்பிளஸ் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.13,000 வரை தள்ளுபடியுடன் வருகிறது. இந்தியாவில் ரூ.49,999 விலை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.36,999-க்கு கிடைக்கிறது. அமேசான் இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.5000 தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.36,999-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அடிப்படை மாறுபாடு ஆகும். முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கும் போது ரூ.5000 தள்ளுபடி விலையில் கிடைத்தது. ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999 ஆக இருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகை இல்லாமல் இந்த சாதனத்தை ரூ.36,999-க்கு ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த தள்ளுபடி அமேசான் கூப்பன்கள் மூலம் வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்ட்களுக்கு தள்ளுபடி
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்ட்களுடன் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது அமேசான் கூப்பன் இல்லாமல் ரூ.8000 தள்ளுபடி பெறலாம். ஐசிஐசிஐ வங்கி அல்லது கோடக் வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையானது அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் தற்போது இந்த கார்டுகளுக்கு ரூ.5980 என தள்ளுபடியை வழங்குகிறது.

120Hz ரெப்பிரேஷ் ரெட் AMOLED டிஸ்ப்ளே
இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் AMOLED உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 48 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் உடன் 2 எம்பி மோனோகிறோம் சென்சார் உடன் 16 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 65W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 5ஜி: அம்சங்கள்
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் திரவ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. எச்டிஆர் 10+ ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1100 நீட் பீக் பிரகாசம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் குறித்து பார்க்கையில் 87.6% ஆகும். இதன் டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 20:9 டிஸ்ப்ளே உடல் விகிதத்தையும் 420 பிக்சல் அடர்த்தியையும் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சம் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ்
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மேம்பாட்டு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் அட்ரீனோ 660 ஜிபியூ உடன் வருகிறது. அமேசான் மூலம் கிடைக்கும் தள்ளுபடி சலுகை ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கையில் அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது.

மூன்று பின்புற கேமரா
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் கேமரா அமைப்பை உருவாக்க முன்னணி கேமரா தயாரிப்பாளராந ஹாசர்ப்ளாடுடன் ஒன்பிளஸ் இணைந்திருக்கிறது. ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு என 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இந்த 50 மெகாபிக்சல் கேமரா ஆனது அல்ட்ரா வைட் கேமராவாகும். இதில் 2 எம்பி மோனோக்ரோம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் சாதனமானது ஆட்டோ எச்டிஆர் தொழில்நுட்பத்துடன் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.


Click it and Unblock the Notifications