அடடே! விலை இன்னும் குறைஞ்சுட்டா! OnePlus 9 5G / Samsung Galaxy S20 FE 5G வாங்கச் சரியான நேரம்..

|

ஒன்பிளஸ் நிறுவனம், OnePlus 10 தொடர் அறிவிக்கப்பட்டபோது OnePlus 9 5G பெரும் தள்ளுபடியைப் பெற்றது. தற்போது, ​​OnePlus 9 சாதனம் இந்தியாவில் ரூ. 37,999 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட அதே விலையில் Samsung Galaxy S20 FE 5G சாதனம் கூட ரூ. 36,990 என்ற விலையில் இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் உள்ள இரண்டு சாதனங்களும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகின்றன.

OnePlus 9 5G மற்றும் Samsung Galaxy S20 FE 5G வாங்க பெஸ்ட் வாய்ப்பு

OnePlus 9 5G மற்றும் Samsung Galaxy S20 FE 5G வாங்க பெஸ்ட் வாய்ப்பு

நீங்கள் அமேசான் இந்தியாவிலிருந்து Galaxy S20 FE ஐ வாங்குகிறீர்கள் என்றால், வவுச்சரைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ. 3,000 தள்ளுபடியையும் பெறலாம். ஒருவேளை உங்களுக்கு சாம்சங் சாதனத்தின் மீது ஆர்வம் குறைவாக இருந்தால், நீங்கள் ஒன்பிளஸ் சாதனத்திற்குச் செல்லலாம். OnePlus 9 5G சாதனத்தின் மீது சிட்டி வங்கி அட்டை பயனர்களுக்கு, தற்போது கிடைக்கும் விலையில் இருந்து கூடுதலாக 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். OnePlus 9 உடன் ஆறு மாதங்களுக்கு இலவச Spotify பிரீமியம் சந்தாவும் இத்துடன் கிடைக்கிறது.

ரூ.2,499 மதிப்புள்ள சலுகை

ரூ.2,499 மதிப்புள்ள சலுகை

OnePlus 9 5G வாங்குதலுடன் முற்றிலும் இலவசமாக ரூ.2,499 மதிப்புள்ள இலவச கவரையும் வழங்குகிறது. ஒன்பிளஸ் 9 5G உடன் நீங்கள் பெறக்கூடிய ரூ.3,000 இலவச எக்ஸ்சேஞ்ச் போனஸ் கூட இத்துடன் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ்ரசிகர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனமும் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுவதனால் ஒன்பிளஸின் முந்தைய மாடல்களின் விலையில் நாம் சரிவை பார்க்க முடிகிறது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

Samsung Galaxy S20 FE 5G ஐ விட OnePlus 9 5G நிச்சயமாக ஒரு நல்ல சாய்ஸ்

Samsung Galaxy S20 FE 5G ஐ விட OnePlus 9 5G நிச்சயமாக ஒரு நல்ல சாய்ஸ்

சிறந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. காரணம், முதலாவதாக, சாம்சங் நிறுவனத்திற்குச் சொந்தமான சாம்சங் Galaxy S20 FE ஸ்மார்ட் போன் ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அசத்தல் சாதனமாகும். மேலும், OnePlus 9 5G ஸ்மார்ட் போன் ஆனது சமீபத்திய 2021 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அற்புதமான சாதனமாகும். OnePlus 9 5G ஆனது Qualcomm Snapdragon 888 SoC உடன் வருகிறது.

OnePlus 9 5G ஏன் சிறப்பாக உள்ளது தெரியுமா?

OnePlus 9 5G ஏன் சிறப்பாக உள்ளது தெரியுமா?

இது சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஃஎப்இ இல் உள்ள Qualcomm Snapdragon 865 சிப்செட்டை விட அதிக சக்தி வாய்ந்தது. சார்ஜிங் திறன்களில் கூட, OnePlus 9 5G சாதனம் சாம்சங்கின் சாதனத்தை விட முன்னால் உள்ளது. மேலும், இரண்டு சாதனங்களின் மறுவிற்பனை மதிப்பை நீங்கள் கருத்தில் கொண்டால், OnePlus 9 5G இன்று அதிக பணத்தைப் பெறும். சாம்சங் பிரியர்களுக்கு Galaxy S20 FE 5G ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆனால், தற்போது ஒன்பிளஸ் 9 5G ஸ்மார்ட் போனுக்கு முன்னால் இது போதுமானதாக இல்லை.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

Hasselblad கேமராக்களுடன் வரும் ஒன்பிளஸ் 9 5ஜி

Hasselblad கேமராக்களுடன் வரும் ஒன்பிளஸ் 9 5ஜி

ஏனெனில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் இது Hasselblad கேமராக்களுடன் வருகிறது. மிரட்டலான கேமரா அனுபவத்தை வழங்கும் ஒரு மிரட்டல் ஸ்மார்ட் போனை குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் நேரம் இது. OnePlus 9 5G ஸ்மார்ட் போனை OnePlus இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளுடன் நேரடியாக வாங்கலாம். நீங்கள் Galaxy S20 FE ஐ வாங்க விரும்பினால் Amazon உடன் செல்வது நல்லது. அங்கு, உங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் சில சலுகைகள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 9 5G Price Went Down To The Selling Rate That Close To Samsung Galaxy S20 FE 5G : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X