Home
News

OnePlus பயனர்கள் "பச்சை பச்சையா" புகார் செய்றாங்க.! என்ன காரணம் தெரியுமா?

OnePlus பயனர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? உங்ககிட்ட ஒன்பிளஸ் போன் இருக்கிறதா? அதிலும் குறிப்பாக நீங்கள் OnePlus 8T பயன்படுத்தும் பயனரா? அப்போ, இந்த பதிவை மிஸ் செய்யாமல் இறுதி வரை படியுங்கள். சமீபத்தில் உங்கள் போன் உங்களை அப்டேட் செய்ய சொல்லி நோட்டிபிகேஷனை அனுப்பி இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

புதிய சாப்ட்வெர் அப்டேட் மூலம் சிக்கல்.!

புதிய சாப்ட்வெர் அப்டேட் மூலம் சிக்கல்.!

காரணம், சமீபத்தில் வெளியான புதிய சாப்ட்வெர் அப்டேட்டில் ஒரு புதிய கிளிட்ச் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், கூடுதல் கவனத்துடன் இருக்கும் படி, வலியுறுத்தப்பட்டுள்ளது. சரி, இந்த சமீபத்திய அப்டேட் மூலம் என்னென்ன சிக்கல்கள் உருவாகும் என்பதை இப்போது பார்க்கலாம்.

5ஜி போன் வாடிக்கையாளர்களை தொற்றிக்கொண்ட

5ஜி போன் வாடிக்கையாளர்களை தொற்றிக்கொண்ட "டென்ஷன்"

5ஜி போன் வாங்கினாலும் வாங்கினார்கள், எல்லோருக்கும் ஒரு சிறிய டென்ஷன் தொற்றிக்கொண்டது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் 5ஜி அறிமுகத்திற்குப் பிறகு, அவர்கள் சாதனத்திற்கான உரிய அப்டேட் கிடைக்க வேண்டும் என்று காத்திருக்க நேர்ந்ததே இவர்களுடைய டென்ஷனிற்கு ஒரு முக்கியம் காரணமாகும்.

இது இப்போது ஒன்பிளஸ் பயனர்களுக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

OnePlus 5G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்

OnePlus 5G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்

OnePlus நிறுவனம் சமீபத்தில், அதன் 5G ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான உரிய சாப்ட்வேர் அப்டேட்களை படிப்படியாக அறிமுகம் செய்து வந்தது. இத்துடன் சில ஸ்மார்ட்போன்களுக்கான நவம்பர் மாத அப்டேட்டையும் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அப்படி, OnePlus 8T பயனர்களுக்காக வெளியிடப்பட்ட புதிய அப்டேட் மூலம் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

உங்ககிட்ட OnePlus 8T இருக்கிறதா? உஷார்.!

உங்ககிட்ட OnePlus 8T இருக்கிறதா? உஷார்.!

OnePlus 8T ஒரு 5ஜி டிவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இது Qualcomm Snapdragon 865 சிப்செட் உடன் இயங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், நாம் பேச போவது இதன் அம்சங்களைப் பற்றி அல்ல.

உண்மையிலேயே OnePlus 8T ஒரு நல்ல 5ஜி டிவைஸ் தான் என்றாலும், இப்போது வெளியான புதிய அப்டேட்டால் OnePlus 8T பயனர்கள் பலர் செம கடுப்பில் அலைகிறார்கள்.

புதிய OxygenOS C.36 அப்டேட்.!

புதிய OxygenOS C.36 அப்டேட்.!

OnePlus நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட OxygenOS C.36 வெர்ஷனை அப்டேட் செய்த OnePlus 8T பயனர்களின் டிஸ்பிளேவில் பச்சை நிற கோடு தோன்ற துவங்கியுள்ளது.

அப்டேட் செய்ததிற்குப் பின்னரே இந்த கோளாறு கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட OnePlus 8T பயனர்கள், "பச்சை பச்சையாக" தெரிகிறது என்று நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பூட்டிங் கோளாறு.. டிஸ்பிளேவில்

பூட்டிங் கோளாறு.. டிஸ்பிளேவில் "பச்சை பச்சையாக" ஸ்ட்ரைப்ஸ்

இன்னும், சில பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இன்னும் சிலருக்கு புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பிறகு பூட் செய்வதில் சிக்கல்கள் சந்திக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிஸ்பிளே ஸ்ட்ரைப்ஸ் போல, பலர் பூட்டிங் கோளாறு பற்றியும் நிறுவனத்திடம் புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர்.

2 மணி நேரம் பூட்டிங் ஆகாத சிக்கலா?

2 மணி நேரம் பூட்டிங் ஆகாத சிக்கலா?

ஒரு பயனருக்கு பூட்டிங் துவங்க 2 மணி நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு பூட்டிங்கே துவங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பல முறை ரீஸ்டார்ட் செய்த பிறகு ஒரு வழியாக போன் பூட்டிங் பிராஸசை துவங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த பூட்டிங் சிக்கல் பெருமளவில் காணப்படவில்லை என்றும், சிலருக்கு மட்டுமே காணப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொஞ்சம் பொறுத்திருந்து அப்டேட் செய்யுங்க.!

கொஞ்சம் பொறுத்திருந்து அப்டேட் செய்யுங்க.!

ஆனால், டிஸ்பிளேவில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் கோடுகள் போல, ஸ்ட்ரைப்ஸ் தெரிவது பல பயனர்களால் புகாரளிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் OnePlus 8T இருக்கிறது என்றால், உங்களுக்கும் அப்டேட் செய்ய சொல்லி புதிய நோட்டிபிகேஷன் எதுவும் வந்தால், கொஞ்சம் பெருத்திருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கோளாறை சரி செய்த பிறகு நிறுவனம் வெளியிடும் அப்டேட்டை பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 8T Users Complaints About Green Stripes On Display After Recent Oxygen OS Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X