OnePlus பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.. ரெடியா இருங்க!

|

OnePlus 8 சீரிஸ் இல் OnePlus 8, OnePlus 8 Pro மற்றும் OnePlus 8T ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தொடர்ச்சியாக இதை செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தொடர்ந்து செய்யும் ஒன்பிளஸ்

தொடர்ந்து செய்யும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10 ப்ரோக்கான ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13க்கான அப்டேட்டை செப்டம்பர் மாதம் வெளியிடத் தொடங்கியது. இதே அப்டேட் ஒன்பிளஸ் 9 சீரிஸ்க்கு நவம்பர் மாதம் கிடைக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஒன்பிளஸ் 8 சீரிஸ்-க்கு அப்டேட் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

OnePlus 8 சீரிஸ்

OnePlus 8 சீரிஸ்

OnePlus 8 சீரிஸ் வைத்திருக்கும் சீன வாடிக்கையாளர்கள் நிலையான கலர் ஓஎஸ்13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் உலகளாவிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் பயனர்களுக்கும் OxygenOS 13க்கான அப்டேட்டை பெறத் தொடங்கி உள்ளனர்.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 அப்டேட்

ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 அப்டேட்

ITHome இன் அறிக்கையின்படி, தற்போது கிடைக்கும் ஆண்ட்ராய்ட் 13 அடிப்படையிலான அப்டேட் அளவு 5.72 ஜிபி ஆக இருக்கிறது. மேலும் ஒன்பிளஸின் "அக்வாமார்பிக்" வடிவமைப்பை ஒன்பிளஸ் 8 தொடருக்கு நிறுவனம் கொண்டு வருகிறது. ஒன்பிளஸ் 8 தொடருக்கான ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 அப்டேட் தற்போது சர்வதேச பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது என XDA தெரிவித்துள்ளது.

OnePlus 10 Pro

OnePlus 10 Pro

ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் ColorOS 13 ஆனது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ மூலம் ஆகஸ்ட் 30 அன்று ஒப்போ டெவலப்பர் மாநாட்டின் 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டது. OxygenOS 13 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 உடன் OnePlus 10 Pro செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அப்டேட்டில் என்ன கிடைக்கும்?

அப்டேட்டில் என்ன கிடைக்கும்?

நிஜ உலகத் தன்மை கொண்ட அனிமேஷன்கள், ஆப்டிமைஸ்ட் ஃபான்ட், அழகியல் இணைப்பு, கனெக்டிவிட்டி, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உடல்நலம் மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு, செயல்திறன் மற்றும் கேமிங் தொடர்பான பல்வேறு மேம்படுத்தல்கள் இந்த அப்டேட்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிஸ்டம் அப்டேட்

சிஸ்டம் அப்டேட்

OnePlus 8 சீரிஸ் வைத்திருக்கும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலும் இந்த அப்டேட்டின் அளவு 5ஜிபிக்கும் மேல் இருக்கும் காரணத்தால் டேட்டாவை மிச்சப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியம். OnePlus 8 சீரிஸ் பயனர்கள் செட்டிங்ஸ் > சிஸ்டம் > சிஸ்டம் அப்டேட் என்பதற்குள் சென்று அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 10 உடன் அறிமுகமான இந்த போன் தற்போது ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் அப்டேட்டைப் பெறத் தொடங்கி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன். இதில் 48 எம்பி பிரதான கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 16 எம்பி செல்பி கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 4300 எம்ஏஎச் பேட்டரி இதில் இடம்பெற்றிருக்கிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இதற்கும் வழங்கப்பட்டுள்ளது. 48 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 48 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 எம்பி கேமரா என நான்கு கேமராக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இதில் 4510 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 8 Series Smartphone Gets Android 13 Based Oxygen OS 13 Update: How to Check and Update?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X