ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.! முழுத்தகவல்.!

|

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்போன்களின் இந்திய விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது, குறிப்பாக கடந்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் உற்பத்தியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதின் விளைவாக இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள்,

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதம் வழியே மே 29(இன்று) விற்பனைக்கு வரவிருந்தன, ஆனால் இப்போது விற்பனை மற்றும்மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களைஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள், ஸ்டாக்ஸ் கிடைக்கும்போது மட்டுமே அவைகளை வாங்க முடியும்.

 கிரேட்டர் நொய்டாவில் உள்ள

கடந்த வாரத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையில் உள்ள ஆறு தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், தீடிரென அங்கே வேலைகள் நிறுத்தப்பட்டது. அதே ஆலையில் தான் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக நிறுத்தப்பட்ட உற்பத்தியே இந்தியாவில் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்Nபுhன்களின் விற்பனைத் திட்டத்தை பாதித்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!

ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை

ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை

வெளிவந்த தகவலின் அடிப்படையில்,
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.41,999-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.44,998-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.49,999-ஆக உள்ளது.


8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.54,999-ஆக உள்ளது.


12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.59,999-ஆக உள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி
செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட்

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட்

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஒன்பிளஸ் 8ப்ரோ பேட்டரி

ஒன்பிளஸ் 8ப்ரோ பேட்டரி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ
3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது
48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது
16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ
வைஃபை 6
ப்ளூடூத் வி 5.1
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
4,300 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
OnePlus 8 series sale date postponed in India due to production issues And More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X