திடீர் மற்றம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6டி அறிமுக விழா.! எப்ப தெரியுமா?
அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒன்பிளஸ் நிகழ்ச்சி திடீரென்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒன்பிளஸ் நிகழ்ச்சி, திடீரென்று அக்டோபர் 29 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடல் இன் அறிமுகம் விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுமென்று, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அனைத்துச் சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது, ஒன்பிளஸ் இன் அறிமுகம் விழா, ஒரு நாள் முன்பே நடைபெறுமென்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம், அக்டோபர் 30 அன்று நடைபெற இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியுடன், ஒன்பிளஸ் நிகழ்ச்சி நடைபெற வேண்டாம் என்பது தான் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன்க்கு தனித்துவமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூப்பர் ஸ்பெஷல் ஸ்மார்ட் போன் இன் அறிமுகம் விழா, நிச்சயம் தனித்துவமாக நடைபெறுவது தான் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன்க்கும் சிறப்பென்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் முக்கிய காரணமாக பத்திரிகை அன்பர்கள் மற்றும் காட்ஜெட் பிரியர்கள் மற்றும் ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இரண்டு நிகழ்ச்சிக்கும் இவர்களின் வருகை தேவை என்பதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications