விரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

|

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஒன்ப்ளஸ் 5 ஐ போல இல்லாமல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாக மே மாதமே ஒன்ப்ளஸ் 6 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் வெளியாக ஒரு மாதமே இருப்பதால், அதைப் பற்றிய வதந்திகளும், தகவல் கசிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளிவந்த அறிக்கையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியாகி அதிர்ச்சியளித்தது. அதன் மூன்று வித சேமிப்புத்திறனை பொறுத்து விலை அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

இந்திய இணையதளமான ட்ரூ டெக்(true tech) வெளியிட்ட அந்த அறிக்கையில், இந்தியாவில் ஒன்ப்ளஸ்6 ன் விலையை வெளிப்படுத்தியது. அது போல ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் 3 வித சேமிப்புதிறனுடன் ஸ்மார்ட்போன் வெளியாகும் என தெரிவித்திருந்தது.இந்த இணையதளம் ஒன்ப்ளஸ் 5ன் விலையையும் முன்கூட்டியே வெளியிட்டு அது உண்மையாக இருந்தது என்பதால், இதையும் நம்பலாம்.

இந்த அறிக்கையின் படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் 3 வித சேமிப்புதிறனுடன் வெளியாகிறது. 6GB ரேம் மற்றும் 64GB சேமிப்புதிறன் கொண்ட மொபைலின் விலை ரூ33,999 - ரூ36,999 . 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்புதிறன் கொண்டது ரூ.38,999-ரூ.42,999. 8GB ரேம் மற்றும் 256GB சேமிப்புதிறன் கொண்ட மொபைலின் விலை ரூ. 44,999- ரூ48,999 ஆக இருக்கலாம்.

விலை மற்றும் சேமிப்புதிறனை மட்டுமில்லாது அந்த அறிக்கை, ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் வெயர்லஸ் ஹெட்போன் தகவல்களையும் கசியவிட்டுள்ளது. ப்ளூடூத் சான்றிதழை பெற்றுவிட்டதால் இதுவும் இந்தியாவில் வெளியாகவுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஒன்ப்ளஸ் A6003 மாடல் மொபைலின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் மூன்று வித மொபைலின் விலையை நிர்ணயிப்பது மார்ச்29 லிருந்து முடிவெடுக்கப்பட்டு வருகிறது என தெரிகிறது.

இந்தியர்களுக்கு அமேசானின் அலெக்ஸா எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?இந்தியர்களுக்கு அமேசானின் அலெக்ஸா எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?

சமீபத்தில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட டீசர் மூலம், இந்த ஒன்ப்ளஸ்6 மொபைல் சைகை மூலம் கட்டுபடுத்தும் வசதி, திரையை தொடாமலேயே கேமராவின் போகஸை சரிப்படுத்தும் வசதி இருப்பதை காண முடிகிறது. சமீபத்தில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் மூலம், ஸ்னாப்டிராகன் 845Soc மற்றும் முகப்பு வடிவமைப்பை உறுதிபடுத்தியுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

ஒன்ப்ளஸ்6 மொபைல், 6.28 இன்ச் FHD மற்றும் AMOLED, 2280×1080பிக்சல் திரையுடன் வெளிவரும் எனத் தெரிகிறது. ஆண்ராய்டு8.2 ஓரியோ ல் செயல்படும் இது, 16MP மற்றும் 20MP டூயல் கேமராவை கொண்டுள்ளது. மேலும் 3450mAh பேட்டரியுடன் டேஷ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 6 is said to be launched in India in three variants with 6GB/8GB RAM and 64GB, 128GB and 256GB storage options. These variants are said to be priced from Rs. 33,999 and go up to Rs. 48,999. The source has also revealed that the OnePlus Bullets Wireless headphones, which cleared Bluetooth certification will be launched in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X